சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடையை இனி மூடக்கூடாது.. தேங்காய் உடைத்து சூடம் ஏற்றிய குடிக்காரர்.. சாக்லேட் கொடுத்தும் கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு கற்பூரம் ஏற்றி சூரக்காய் உடைத்து கடைத் திறப்பை குடிக்காரர் ஒருவர் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    கடையை இனி மூடக்கூடாது.. தேங்காய் உடைத்து சூடம் ஏற்றிய குடிக்காரர்.. சாக்லேட் கொடுத்தும் கொண்டாட்டம்

    தமிழகத்தில் கடந்த மே 10-ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் முழு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது.

    அதில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மற்ற கடைகள் திறக்கப்படாமல் மதுக்கடைகள் திறப்பதால் தற்போது குறைந்து காணப்படும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    தொற்று குறைந்த மாவட்டங்கள்

    தொற்று குறைந்த மாவட்டங்கள்

    இந்த நிலையில் தொற்று குறைவான மாவட்டங்களில் மட்டுமே இந்த கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி நேற்று வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை வாங்க டோக்கன் கொடுக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

    சாக்லேட்

    சாக்லேட்

    அதன்படி டோக்கன் பெற்ற ஒரு குடிக்காரர், காட்பாடி வள்ளிமலை பகுதி மதுக்கடை திறக்கப்பட்டதால் பள்ளி குழந்தை போல குஷியான அவர் தேங்காய் உடைத்து வழிபட்டது மட்டுமல்லாமல் சாக்லெட் கொடுத்து கொண்டாடியுள்ளார்.

    கடைகள்

    கடைகள்

    இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நிறைய இடங்களில் கடைகள் திறந்த நிலையில் சாரங்கள் கட்டப்பட்டு சமூக இடைவெளிக்காக வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. மாஸ்க் அணியாதோருக்கு மதுபானம் கொடுக்ககூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளன.

    ஆரவாரம்

    ஆரவாரம்

    நிறைய மதுப்பிரியர்கள் பாட்டிலை வாங்கியவுடன் அதற்கு முத்தமிட்டு கொண்டும் நடனம் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு மாதம் கழித்து பாட்டிலை கையில் பார்த்தவுடன் அவர்கள் ஆரவாரமாக இருந்த காட்சிகள் வைரலாகியுள்ளன.

    English summary
    Drunkard in Vellore gives chocolate, breaks coconut for opening of Tasmac shops.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X