கர்நாடகாவில் என்னை கொலை செய்ய பார்த்தாங்க.. வீடியோ போட்டு பரபரப்பை கிளப்பிய டிடிஎப் வாசன்! என்னாச்சு
சென்னை: கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஓடையில் தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது இங்கே குளிக்க கூடாது என்று கூறி தன்னை போதையில் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய பார்த்ததாக டிடிஎஃப் வாசன் கூறியுள்ளார். போதையில் தன்னை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய பார்த்ததாக கூறியுள்ளார்.
கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். பிரபல பைக் ரைடரான இவர், பைக் ஓட்டும் போது தான் பயணம் செய்யும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றி வந்தார். அவரை லட்சக்கணக்கானவர்கள் யூடியூப்பில் பாலோ செய்து வந்தனர். குறிப்பாக 2கே கிட்ஸ்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமாக இருக்கிறார். தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டு வந்ததால் டிடிஎப் வாசனின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து பைக் சாகச வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கும் டிடிஎப் வாசன், அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். அண்மையில் திருப்பதியில் கோவிலுக்கு சென்ற போது பக்தர்களிடம் பிராங்க் செய்து வம்பில் சிக்கினார். இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் டிடிஎப் வாசன் தற்போது பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போதையில் தன்னை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய பார்த்ததாக கூறியுள்ளார். கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஓடையில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்த போது, அங்கு போதையில் வந்த நபர் ஒருவர், இது தங்களுக்கு சொந்தமான இடம், இங்கே குளிக்க கூடாது என்று சொன்னதாகவும் அப்போது பேசிக்கொண்டு இருக்கும் போதே இரும்பு கம்பியால் தன்னை ஒருவர் குத்தியதாக சொல்லியிருக்கிறார் டிடிஎப் வாசன்.

லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகவும், இதனால் தான் இன்று உங்கள் முன்னால் பேசிக்கொண்டு இருக்கிறேன். நான் உயிருடன் இருப்பதற்கு காரணமே கடவுள் புண்ணியம் தான் எனவும் டிடிஎப் வாசன் அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார்.. இது தொடர்பக வீடியோ ஒன்றையும் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருக்கிறார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications