தண்ணி அடிச்சிட்டு வந்த பிளம்பர்.. நள்ளிரவில் 50 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி: சென்னையில் பயங்கரம்
சென்னை: சென்னையில் அரங்கேறியுள்ள ஒரு பாலியல் சம்பவம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. நாளுக்கு நாள் சமூகத்தில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதை மீண்டும் ஒருமுறை சொல்லும் அபாய எச்சரிக்கையாகவும் இந்த சம்பவம் அமைந்துள்ளது.. போலீஸ் விசாரணை துரிதமாக நடந்து வந்தாலும், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை நடந்து வருகிறது..
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட 26 வயதான ஷேக் என்பவர், பிழைப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார்.. இதனால் முகப்பேறு பகுதியில் வாடகைக்கு வீட்டு எடுத்து, அதில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார்.. வேலை முடித்துவிட்டு வரும்போது தண்ணி அடித்துவிட்டுதான் வீட்டுக்கு வருவாராம் ஷேக்..

சென்னை முகப்பேறு ஷேக்
சம்பவத்தன்று இரவு இவர் அதிகப்படியான மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.. அப்போது அந்தப் பகுதியில் சாலையோரம் தங்கியிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை பார்த்துள்ளார்..
ஏற்கனவே மண்டைக்கேறிய போதையில் இருந்ததால், அந்த பெண்ணிடம் மிக மோசமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.. இதனால அதிர்ச்சி அந்த அந்த பெண், ஷேக்கின் வக்கிரம் நிறைந்த செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்..
சரமாரி தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த ஷேக், தற்காப்பிற்காக போராடிய அந்த பெண்ணை கண்டு ஆத்திரமடைந்தார்.. உடனே அருகில் கிடந்த கற்களை எடுத்து, அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.. மேலும், ஆவேசத்தில் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கி உள்ளார்..
இதனால் அந்தப் பெண் வலியால் அலறி சத்தம் போட்டுள்ளார்.. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அப்பகுதியினர் ஓடி வருவதைக் கண்ட ஷேக், பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து ஜே.ஜே. நகர் காவல் துறையினர் உடனடியாக ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தனர்..
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனை
அப்போது ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்..
அவர பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததை அடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றிப் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்..
கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஷேக்கை தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்தனர்..
போதையின் உச்சம்
உயிரிழந்த பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.. போதையின் உச்சத்தில் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த இந்த கொடூரச் சம்பவம், சென்னை மாநகரில் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது..
பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், மது மற்றும் போதைப் பொருட்களின் பிடியில் சிக்கியுள்ள சிலரது கொடூர செயல்கள், பெண்களின் அடிப்படை வாழ்வுரிமையை பறிப்பதாகவே இருக்கின்றன.. குறிப்பாக, சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இத்தகைய வன்முறைகளுக்கு எளிதில் இலக்காவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்...!!!
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications