வேஸ்டாய் கொட்டிக் கிடக்குது.. தங்கத்துக்கு தள்ளுபடியா? துபாய்க்கு இப்படி ஒரு நிலைமையா? பெரிய சிக்கல்
துபாய்: மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் சூழ்நிலையின் தாக்கம் தங்க வர்த்தகத்திலும் தெளிவாக தெரிந்து வருகிறது. உலகளவில் தங்க விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், துபாயில் தங்கம் எதிர்பாராத வகையில் தள்ளுபடி விலையில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகி வர்த்தக உலகில் பரபரப்பு உருவாகியுள்ளது. உலகின் முக்கிய தங்க வர்த்தக மையமாக கருதப்படும் துபாய் நகரில் தற்போது தங்கத்தின் தள்ளுபடி விலை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் அதற்கேற்ப அதிக விலையில் விற்கப்படும். ஆனால் தற்போது மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக துபாயில் தங்க விற்பனை முறை திடீர் மாற்றத்தை சந்தித்துள்ளது.
துபாய் நகரில் உள்ள வர்த்தகர்கள் தங்களிடம் இருக்கும் தங்க கையிருப்பை குறைப்பதற்காக தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைக்கு முக்கிய காரணமாக விமான போக்குவரத்து பாதிப்பு குறிப்பிடப்படுகிறது.
துபாய் தங்கம் தள்ளுபடி
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வழி போக்குவரத்து பகுதியளவில் மூடப்பட்டுள்ளதால் தங்க ஏற்றுமதி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக தங்கம், பயணிகள் விமானங்களின் சரக்கு பகுதியில் உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

தங்கம்
ஆனால் தற்போது பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் துபாயில் இருந்து வெளிநாடுகளுக்கு தங்கத்தை அனுப்புவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே ஏற்றுமதிக்காக தயார் செய்யப்பட்டிருந்த தங்கம் டன் கணக்கில் துபாயிலேயே குவிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் தங்க வர்த்தகர்கள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதற்கான செலவுகளை ஏற்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
மத்திய கிழக்கு போர்
அதனால் உலகளாவிய அளவுகோலாக கருதப்படும் லண்டன் சந்தை விலையை விட ஒரு அவுன்சுக்கு 30 அமெரிக்க டாலர் வரை தள்ளுபடி வழங்கி தங்கத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். இந்திய மதிப்பில் இது ஒரு கிராமுக்கு சுமார் 100 ரூபாய் வரை விலை குறைப்பாக இருக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துபாய் தங்க சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு தங்கம் அனுப்புவதில் இந்த நகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நாடுகளில் இருந்து வரும் தங்கமும் துபாய் வழியாகவே பிற சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.
தங்க வர்த்தகம் சிக்கல்
ஆனால் தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக முக்கியமான விமான வழிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வர்த்தகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளன. துபாயில் இருந்து தங்கத்தை நிலப்பாதை வழியாக அருகிலுள்ள நாடுகளுக்கு கொண்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் அனுப்பும் வாய்ப்பு இருந்தாலும், வர்த்தகர்கள் அதற்கு முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணமாக எல்லை சோதனைகள், பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் அதிகரித்துள்ள காப்பீட்டு செலவுகள் கூறப்படுகின்றன.
போர் பதற்றம்
குறிப்பாக சவூதி மற்றும் ஓமன் போன்ற நாடுகளுக்கு சாலைவழியாக தங்கத்தை கொண்டு செல்வது பல நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் அந்த வழியை பயன்படுத்த வர்த்தகர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் போர் தொடங்கியதிலிருந்து தங்கத்தை எடுத்துச் செல்லும் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தொழில்துறை மதிப்பீடுகளின்படி இந்த செலவுகள் சுமார் 60 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
இந்தியா தங்க இறக்குமதி
இதனால் அதிக அளவில் தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பதை விட விற்பனை செய்து கையிருப்பை குறைப்பது வர்த்தகர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலை இந்தியாவிலும் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய தங்க இறக்குமதி நாடுகளில் ஒன்றான இந்தியா பெருமளவில் துபாயிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்கிறது. தற்போது போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் உடனடி கிடைப்பில் சிறிய அளவு குறைவு ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிபுணர்கள் எச்சரிக்கை
இருப்பினும் உடனடி பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். காரணம், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியா அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. அதன் காரணமாக தற்போதைக்கு போதுமான அளவில் கையிருப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் இன்னும் சில மாதங்கள் நீடித்தால் நிலைமை மாறக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
"இதுதான் ஜப்பான்.." போருக்கு நடுவே தைரியமாக எடுத்த முடிவு.. உலக நாடுகள் கூட திணறுதே! -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications