தொடர்ந்து கொட்டும் கனமழை.. இந்த ரயில்கள் எல்லாம் தாமதமாக புறப்படும்.. தென்னக ரயில்வே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் மழை காரணமாகச் சென்னையிலிருந்து மாலை புறப்பட்டுச் செல்லும் சில ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

சென்னையில் இன்று காலை மிகக் குறுகிய நேரத்தில் அதிதீவிர கனமழை பெய்தது. இதனால் நகரின் பல முக்கிய பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியது.

குறிப்பாகப் பல இடங்களிலும் ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கியது. இதனால் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Due to heavy rain in Chennai, many trains were rescheduled

சென்டரல், கடற்கரை ரயில் நிலையங்கள் அருகே உள்ள தண்டவாளத்தில் தேங்கிய மழை நீரால் செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் ரயில்கள் முதலில் எழும்பூரிலேயே நிறுத்தப்பட்டன. பின்னர், சிறிது நேரம் கழித்து சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே தண்டவாளமே தெரியாத அளவுக்குச் சூழ்ந்துள்ள மழை நீரில் மின்சார ரயில்கள் மிகவும் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டன.

அதேபோல பேசின்பிரிட்ஜ் ரயில் நிலைய இருப்புப்பாதை முழுதும் மழைநீரால் மூடியதால் சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு விரைவில் ரயில் சென்னை வந்தடையும் எனச் சென்னை மண்டல ரயில்வே அறிவித்தது.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இருந்து கிளம்பும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Due to heavy rain in Chennai, many trains were rescheduled

தாமதம் ஆன ரயில்கள்

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4:20 மணிக்கு மங்களூரு செல்ல இருந்த சிறப்பு ரயில், தாமதமாக 7:30 மணிக்குப் புறப்படப்பட்டுச் சென்றது.

சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 5:40 மணிக்கு ஜெய்ப்பூருக்குச் செல்ல இருந்த சிறப்பு ரயில் தாமதமாக இரவு 8:30 மணிக்கு புறப்படப்பட்டுச் சென்றது.

ரயில் எண் : 02639 - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்- இன்று இரவு 8.55 புறப்படும் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படுகிறது.

ரயில் எண்: 02615 -டெல்லி ஸ்பெஷல் - இன்று இரவு 6.50 புறப்படும் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு இரவு 9.30 மணிக்குப் புறப்படுகிறது.

ரயில் எண் : 02671- மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் - இன்று இரவு 9.05 மணிக்குப் புறப்படும் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு இரவு 10.15 மணிக்குப் புறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+