சென்னை மக்களே சண்டே பிளான் இருக்கா? மின்சார ரயில்களை நம்பாதீங்க.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வார விடுமுறை நாளான ஞாயிறன்று, பராமரிப்பு பணிகள் காரணமாக சில மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. எனவே ஞாயிறு அவுட்டிங் பிளான் வைத்திருப்பவர்கள், போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடுகளை அணுகுவது சிறந்தது.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு புறநகர் ரயில்களுக்கும் பங்கு இருக்கிறது.

Suburban Trains Electric Trains Chennai Southern Railway

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் இன்ஜினியரிங் பணிகள் காரணமாக, இன்றும் நாளையும் சில புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 9.10, 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், இன்றிரவு தாம்பரத்திலிருந்து 10.40, 11.20, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 7.50 மணிக்கு திருவள்ளூருக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், இன்றிரவு 9.35 மணிக்கு திருவள்ளூரிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 9.20 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், இன்றிரவு 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக செய்யப்படுகிறது.

நாளை அதிகாலை 4.15 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக செய்யப்படுகிறது. அதிகாலை 4.05 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக செய்யப்படுகிறது.

எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்: செங்கல்பட்டிலிருந்து இன்றிரவு 8.45, 9.10, 10.10, 11 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதியளவில் செய்யப்படுகிறது. திருமால்பூரிலிருந்து இன்றிரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதியளவில் செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 10.40 மணிக்கு, நாளை அதிகாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதியளவில் செய்யப்படுகிறது.

மேற்கண்ட ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதியளவில் செய்யப்படுகிறது. மேற்கண்ட ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+