அசிங்கமாகப் போய் விடும்.. துரைமுருகன், திமுக தலைமை மீது சுதீஷ் நேரடி பாய்ச்சல்!
Recommended Video

சென்னை: துரைமுருகன் திமுக தலைமை தொடர்பாக மோசமாக பேசியுள்ளார், அதை வெளியே சொன்னால் அசிங்கமாகிவிடும் என்று தேமுதிக தொகுதி பங்கீடு குழுவைச் சேர்ந்தவரும், தேமுதிக துணைச் செயலாளருமான சுதீஷ் தெரிவித்தார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய சுதீஷ் கூறியதாவது: நான் 10 நாட்களுக்கு முன்பாக திமுக பொருளாளர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். ஆனால் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதை பல ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. தொகுதி பற்றிய விவரங்கள் விரைவில், வெளியே வரும். நாங்கள் என்ன பேசினோம் என்பதை, அவர்களைப் போல வெளிய சொல்ல மாட்டோம். நாங்கள் வந்த இடம் அப்படி, அவர்கள் வந்த இடம் அந்த மாதிரி.

அசிங்கமாகிவிடும்
துரைமுருகன் என்னிடம் பேசியதை நான் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் கட்சி பற்றியும், அந்த தலைமை பற்றியும் அவர் என்னிடம் என்னென்னவோ பேசியுள்ளார். அதை எல்லாம் வெளியே சொன்னால் அசிங்கமாகிவிடும்.

பல வருஷமா பேசுறோம்
துரைமுருகன் எனக்கு பக்கத்து ஊர்க்காரர். எனவே 10 வருடம் முன்பாக இருந்தே, அரசியல் தொடர்பாக நிறைய விஷயங்களை பேசியுள்ளோம். நான் அரசியல், நாகரீகம் கருதி, துரைமுருகன் கூறிய தகவல்களை நான் வெளியில் சொல்ல மாட்டேன். ஏனெனில் எங்கள் வளர்ப்பு அது மாதிரி என்றார்.

துரைமுருகன் பேச்சு
தேமுதிக விருப்பம் தொடர்பாக பேச, ஸ்டாலினுக்கு போன் செய்தபோது, அவர் தூங்கியதாகவும், எனவே, நான் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டதாகவும், துரைமுருகன் கூறியதை நிருபர்கள் குறிப்பிட்டு சுதீஷிடம் கேட்டனர்.

திமுக தலைமை
இதற்கு பதிலளித்த சுதீஷ் "தமிழ்நாட்டில் எதைப்பற்றியும் திமுகவுக்கு கவலை கிடையாது. அவர்கள் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர் தலைவர் தூங்கினால் என்ன? தூங்காவிட்டால் எனக்கென்ன? என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications