Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விம்மி கலங்கிய துரை வையாபுரி! உருக்குலைந்த சிவகாசி.. "குண்டர் சட்டத்துல தூக்குங்க".. சீறிய துரை வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயிர் இழப்புகள் ஏற்படும் வகையில் திட்டமிட்டு விதிமீறி பட்டாசு ஆலையை நடத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9-ம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

Durai Vaiko says Strict action need against Crackers factory owners and Durai Vaiyapuri Major requests to Tamil Nadu Government

துரை வைகோ: இந்நிலையில், சிவகாசிக்கு வருகை தந்த துரை வைகோ, சொக்கலிங்கபுரம் , சின்னையாபுரம், மத்திய சேனை, ரிசர்வ்லைன் அய்யாபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று இறந்த 10 தொழிலாளர் குடும்பங்களுக்கும் ஆறுதலை சொன்னார்.. பிறகு அங்கிருந்து, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அங்கு துரை வைகோவை பார்த்ததுமே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களுக்கு துரை வைகோ ஆறுதல் சொன்னார்.. அப்போது, தீவிரமான காயங்கள் ஏற்பட்டுள்ளதால், விருதுநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 3 பேருக்கு, தீவிர சிகிச்சை அளிக்க வேண்டுமென அவர்களின் குடும்பத்தினர் துரை வைகோவிடம் முறையிட்டார்கள்..

சிகிச்சை முறைகள்: இதைக்கேட்ட துரை வைகோ, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதுமட்டுமல்லாமல், காயமடைந்தவர்களை நேரில் சந்திக்கவும், உயிர் காக்கும் சிறப்பு மருத்துவ வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்திடவும் டாக்டர் ஏ.ஆர். ரகுராமன் எம்எல்ஏவை இன்று காலை நேரில் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

Durai Vaiko says Strict action need against Crackers factory owners and Durai Vaiyapuri Major requests to Tamil Nadu Government

இத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் துரை வைகோ.. அப்போது அவர் சொன்னதாவது:

ஆறுதல்: "கடந்த 9 ஆம் தேதி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்து போன பத்து தொழிலாளர்களின் குடும்பத்தினரே நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னேன்.. முக்கிய வருவாய் ஈட்டும் குடும்ப உறுப்பினரை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர் படும் வேதனை மனதை வாட்டுகிறது.

சின்னஞ்சிறு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு தாய் இறந்தது, கர்ப்பிணி மனைவியை விட்டு விட்டு கணவர் இறந்தது, தாயை விட்டு விட்டு ஒரே மகன் இறந்தது என ஒரே குடும்பத்தில் 3 பேர் இறப்பு என ஒவ்வொரு குடும்பமும் படும் துயரம் தாங்க முடியாத துயரமாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெம்பக்கோட்டை ராமுத்தேவன்பட்டி பகுதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்த குடும்பத்தினர் நிலையும் இதே போன்ற துயரம் நிறைந்ததாகத்தான் இருந்தது..

ஏழ்மை குடும்பம்: மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்ப பின்னணி கொண்ட மிக மிக எளிய ஓட்டு வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினரின் எதிர்கால நிலைமையை நினைக்கும்போது, கவலைதான் அதிகமாகிறது.. இறந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு, பட்டாசு ஆலை நிர்வாகத் தரப்பில் 5 லட்ச ரூபாய் இழப்பீடும், 50 ஆயிரம் ரூபாய் ஈமச்சடங்கு செலவிற்கும் வழங்கியதாக சொன்னார்கள். ஆனால், அரசின் நிவாரணத்தொகை தேர்தல் நடத்தை விதி காரணமாக உடனடியாக இன்னும் வழங்கப்படவில்லை.

Durai Vaiko says Strict action need against Crackers factory owners and Durai Vaiyapuri Major requests to Tamil Nadu Government

தமிழ்நாடு முதல்வர் அவர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உரிய அனுமதியை தேர்தல் ஆணையத்தில் பெற்று மிக விரைவில் அந்த நிவாரண உதவித்தொகையை வழங்கிட செய்வார்கள்.. மாவட்ட அமைச்சர்களான கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

வெடிவிபத்துகள்: கடந்த 4 மாதங்களில் மட்டும் 28 பேர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்து உள்ளனர். இது போன்ற பட்டாசு ஆலை விபத்திற்கு முக்கிய காரணம், அதனுடைய உரிமையாளர்கள் அதிகமாக கட்டணம் பெற்றுக்கொண்டு ஆலையை குத்தகைக்கு விடுவது தான்..

அப்படி அதிக கட்டணம் செலுத்தி குத்தகைக்கு எடுக்கும் குத்தகைதாரர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகமாக மருந்துகளை இருப்பு வைப்பதும், கையாள்வதும், அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களை விட பன்மடங்கு கூடுதல் தொழிலாளர்களை அனுமதித்து வேலை செய்ய பணிப்பதும்தான் அனைத்துக்கும் காரணமாகிவிடுகிறது. எனவே, இப்படி விதிமீறலில் ஈடுபடுகின்ற உரிமையாளர்கள் குத்தகைதாரர்களை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும்.

Durai Vaiko says Strict action need against Crackers factory owners and Durai Vaiyapuri Major requests to Tamil Nadu Government

பட்டாசு ஆலைகள்: ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கும் போது அதில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையாக இயங்கி வரும் நிலையில், ஒரு சில உரிமையாளர்களும் குத்தகைதாரர்களும் செய்யும் விதி மீறல்களாலும், முறைகேடுகளாலும் ஒட்டுமொத்த பட்டாசு ஆலைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதனை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வகுத்து தந்துள்ள சட்டவிதிமுறைப்படி பட்டாசு ஆலைகளை இயக்கிட வேண்டும்.

உயிரிழப்புகள் ஏற்படும் வகையில் திட்டமிட்டு விதிமீறி பட்டாசு ஆலையை நடத்துவோர் மீது குண்டர் சட்டம் உட்பட கடுமையான சட்டப் பிரிவுகளில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இனி வருங்காலத்தில் பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள், உயிர் இழப்புகள் நிகழாத வண்ணம் அரசு துறைகள் கண்டிப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர்கள்: இறந்த தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை விரைவில் கிடைக்க பெறும் என்பதைப் போல் படுகாயம் உற்ற தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி பெறுவதற்கும் அமைச்சர்களிடமும் எடுத்துச்சொல்லி உள்ளேன். மாவட்ட நிர்வாகமும் இதில் கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்" என்றார் துரை வைகோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+