70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த துர்கா ஸ்டாலின்! ஏ டூ இசட் சீர் வரிசைப் பொருட்கள்!
70 ஜோடிகளுக்கு சீர் வரிசைப் பொருட்களுடன் திருமணம் நடத்தி வைத்த சேகர்பாபு.
சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார் துர்கா ஸ்டாலின்.
இதேபோல் 70 ஜோடிகளுக்கும் குறைவின்றி ஏ டூ இசட் எல்லா வகையான சீர் வரிசைப் பொருட்களையும் அவர் வழங்கியுள்ளார்.
இதனிடையே மணமக்களுக்கு சொனாட்டா கைக்கடிகாரம் ஒன்றையும் துர்கா ஸ்டாலின் அன்பளிப்பாக தனிப்பட்ட முறையில் அளித்திருக்கிறார்.

ஸ்டாலின் 70
முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடி வரும் அமைச்சர் சேகர்பாபு 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்திருக்கிறார். மணமக்களை வாழ்த்தி மாங்கல்யத்தை தனது கையால் எடுத்துக் கொடுத்தார் துர்கா ஸ்டாலின்.

சீர் வரிசைப் பொருட்கள்
கட்டில், பீரோ, பண்டம் பாத்திரம், என சகல விதமான சீர் வரிசைப் பொருட்களும் எந்த குறையும் இல்லாமல் 70 ஜோடிகளுக்கும் வழங்கப்பட்டன. இந்த திருமண விழாவில் 70 மணமக்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். இதேபோல் திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை காலை உணவும் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, துர்கா ஸ்டாலினை அண்ணியார் என்று வாய் நிறைய அழைத்தார்.

முகூர்த்த நேரம்
அதுமட்டுமல்ல துர்கா ஸ்டாலினை புகழோ புகழ் என்றும் புகழ்ந்தும் பேசினார். முகூர்த்த நேரம் முடிவதற்குள் நல்ல காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக தனது உரையை முடித்துக் கொள்வதாக கூறி தனது செண்டிமெண்டையும் அமைச்சர் சேகர்பாபு வெளிப்படுத்தினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் சேகர்பாபுவை புகழ்ந்து பேசினார். சென்னையில் எதிரும் புதிருமாக அரசியல் செய்பவர்கள் இவர்கள் இருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண விழா
தனது தங்கை மறைவை தொடர்ந்து திருமண விழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் கடந்த 15 நாட்களாக செல்லாமல் சோகத்தில் இருந்த துர்கா ஸ்டாலின், ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி நடத்திவைக்கப்படும் திருமணம் என்பதால் இதில் பழைய உற்சாகத்துடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications