810 பக்க சார்ஜ் ஷீட்.. பெட்டி பெட்டியாக 18000 ஆவணங்கள்.. சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிக்கையுடன் 18,000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
காமராஜ் வீட்டில் ரெய்டு: அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தொடர்புடைய இடங்களில் சென்னை, மன்னார்குடி, திருவாரூர் என பல இடங்களில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோதனை மேற்கொண்டது லஞ்ச ஒழிப்புத்துறை.

முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.41 லட்சத்து 6 ஆயிரம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, ஐபோன், கணினி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.
வழக்குப்பதிவு: இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இன்பன், இனியன், காமராஜின் நண்பர்கள் சந்திரசேகர், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் என ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் அடிப்படியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தமிழ்நாடு சபாநாயகரிடம் அனுமதி பெற்று இந்த வழக்கு தொடர்பாக தற்போது காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காமராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் உள்பட 6 பேர் மீது 810 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கை: குற்றப்பத்திரிக்கையுடன் 18,000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் இந்த வழக்கு விசாரணை அடுத்தடுத்து வேகமெடுக்கும் என்று கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து அதிமுக மாஜிக்கள் மீதான வழக்குகள் வேகமெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
-
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications