முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சிக்கல்.. லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு
சென்னை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த போது வைத்திலிங்கம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது 2015 - 2016 ஆம் ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி கட்டுவதற்கு ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் 2014- 2015 ஆம் ஆண்டு காலத்தில் பெங்களத்தூர் பகுதியில் ஸ்ரீராம் குழுமத்தின் ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் அண்ட் இன்பராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 57 ஏக்கர் நிலத்தில், 24 பிளாக்குகள், 1543 வீடுகள் கொண்ட உயர்மட்ட கட்டுமானம் அமைக்க திட்டமிட்டப்பட்டது. இதற்கு 2013 ஆம் ஆண்டில் சிஎம்டிஏவில் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால் இதற்கான அனுமதியானது 2 ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் தான் இதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தான் ஸ்ரீராம் குழும நிறுவனத்திடம் இருந்து ரூ.27 கோடியை அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் பெற்றதாக அறப்போர் இயக்கும் தகுந்த ஆதாரத்துடன் புகார் செய்திருந்தது. ரூ.27 கோடி ரூபாயும் ஒரே காலக்கட்டத்தில் கைமாறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தான் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் முதல் குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பெயரும், இரண்டாம் குற்றவாளியாக ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் அண்ட் இன்பராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டட் இயக்குனரான ரமேஷ் என்பவரும், மூன்றாம் மற்றும் 4 ஆம் குற்றவாளியாக வைத்திலிங்கத்தின் 2 மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு பெயர்களும் என மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வருகிறார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications