வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து குவித்த மாஜி அமைச்சர் விஜய பாஸ்கர்- முதல் தகவல் அறிக்கையில் 'ஷாக்'
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர். அவர் பதவியில் இருந்த போதே போக்குவரத்து கழகங்களுக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் போக்குவரத்து கழகங்களில் எப்படி எல்லாம் ஊழல் நடந்துள்ளது என்பதை விளக்கி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அப்போதே திமுக புகாரும் கொடுத்ததது. இந்த நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

21 இடங்களில் ரெய்டு
அத்துடன் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையும் நடத்தினர். இந்த சோதனைகளின் ஏராளமான ஆவணங்கள், ரூ25 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

பதுக்கிய ஆவணங்கள்
விஜயபாஸ்கருக்கு சொந்தமான கொப்பரை கிடங்கில் கொப்பரைகளுக்குள் ஆவணங்கள் பதுக்கி வைத்து இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆனால் தம் மீதான குற்றச்சாட்டுகளை எம்.ஆர். விஜயபாஸ்கர் மறுத்தார். தாம் வாடகை வீட்டில்தான் வசிப்பதாகவும் கூறியிருந்தார்.

அரசியல் பழிவாங்கல்
மேலும் தமது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு முறையான கணக்கு உள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார்.

வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்துகள்
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அந்த அறிக்கையில், 2016-ம் ஆண்டு எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தமக்கு ரூ2.51 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தமது சொத்து மதிப்பு ரூ8.62 கோடி என காட்டியிருக்கிறார் விஜயபாஸ்கர். மொத்தமாக வருமானத்துக்கு அதிகமாக 55%% சொத்துகளை எம்.ஆர். விஜயபாஸ்கர் வாங்கு குவித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மனைவி, சகோதரர் மீதும் வழக்கு
அத்துடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் உள்ளிட்டோர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications