கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவு- பிரபாகரனுக்கு காட்டுகிற மரியாதையா இது? விடுதலை ராஜேந்திரன் கேள்வி
சென்னை: பாலியல் வீடியோ சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.கவின் கே.டி. ராகவனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்திருப்பது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் இதுதான் பிரபாகரனை தமது அடையாளமாக கொண்டிருக்கும் சீமான், பிரபாகரனுக்கு காட்டுகிற மரியாதையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலை ராஜேந்திரன்.
Recommended Video
இது தொடர்பாக விடுதலை ராஜேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கை:

வேறு யாரும் செய்யாததையா கே.டி இராகவன் செய்துவிட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை நாம் கேட்க வேண்டி இருக்கிறது.
1) ஒரு கட்சியில் மாநில பொறுப்பாளராக இருக்கக் கூடியவர் அதே கட்சியில் பணியாற்ற வந்த ஒரு பெண்ணுக்கு, தன்னுடைய பொதுச் செயலாளர் அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய பாலியல் சுரண்டலுக்கு பயன்படுத்துவது எல்லோரும் செய்யக்கூடிய ஒன்றுதானா ?
2) நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 50% இடங்களை பெண்களுக்கு எங்கள் கட்சி தான் வழங்கியது என்று மார்தட்டினார் இவர். பெண்களுடைய சமத்துவத்தை நாங்கள் தான் அங்கீகரிக்கிறோம் என்று இதன்மூலம் பெருமையடித்துக்கொண்டார். அப்படிப்பட்ட இந்த ஒருங்கிணைப்பாளர், தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் அத்தனை பேரும் இவருடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா ?
3) ஈழத்தின் தேசியத் தலைவர் தனக்கு மட்டுமே உரியவர். தான் மட்டுமே அண்ணனாக கொண்டாடுவதற்கு உரிமையுண்டு என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பவர், 'அந்த தேசியத்தலைவர் இயக்கத்தில் பால் உறவு குற்றங்கள் பற்றிய பிரச்சனைகள் வருகிறபோது எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு'.
தேசியத் தலைவரை தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்ட ஒருவர் இப்படி வேறு ஒருவர் செய்யாததையா செய்தார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா ? இதுதான் அந்த தேசியத்தலைவருக்கு அவர் காட்டுகிற மரியாதையா ? இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். இவ்வாறு விடுதலை ராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications