சென்னையில் வேலைக்கே போகாமல் 18 லட்சம் சம்பாத்தியம்.. சப்-இன்ஸ்பெக்டர் ஆக வேண்டியவருக்கு ட்விஸ்ட்
சென்னை: வெறும் வார்த்தை ஜாலங்களில் சிலர் பேசி மயக்கி பணத்தை பறிப்பார்கள். யாருமே நம்ப முடியாத விஷயங்களை கூறி மிரள வைப்பார்கள். இறுதியில் சதுரங்க வேட்டை பட பாணியில் ஆசையை தூண்டுவார்கள். அந்த ஆசையில் சற்று வழுக்கினால் அவ்வளவுதான் பணத்தை மொத்தமாக பறித்துவிடுவார்கள். அப்படித்தான் சென்னையில் அரசு வேலை கனவில் இருந்த பட்டதாரி வாலிபர் ஒருவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சத்தை சுருட்டி உள்ளார் ஒரு இளைஞர்.
சதுரங்க வேட்டை படத்தில் ஒரு டயலாக் வரும்.. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்று இருக்கும். அந்த கால ஈமு கோழி தொடங்கி இந்த காலத்தில் எம்எல்எம் பிசினெஸ் வரை எல்லாமே ஏமாற்று வேலை தான். நம்மூரில் அதிக வட்டி தருவதாக யாராவது நிறுவனம் ஆரம்பித்தால் போய் விழுந்து ஏமாறுகிறார்கள். உழைக்காமல் பணம் வருவதற்கு வழி இருக்கு என்று கூறினால் ஏமாற்றிவிடலாம் என்கிற நிலையே இருக்கிறது.

குண்டக்க மண்டக்க படத்தில் வடிவேலு பார்த்திபனிடம் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவது எப்படி என்று கூறுவதாக கூறி ஏமாற்றுவார். இறுதியாக உன்னை போலவே பணக்காரன் ஆக ஆசை உள்ளவர்களை ஏமாற்று என்பதாக இருக்கும். அந்த லிஸ்டில் அரசு வேலையையும் சேர்க்கலாம். அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலர் லட்சங்களை கொட்டி ஏமாறுகிறார்கள். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 32 வயதாகும் சீனிவாசன் அரசாங்க வேலையை வாங்க வேண்டும் என்று ஆசையோடு காத்திருந்தார்.
காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலையில் சேர வேண்டும் என்று விரும்பி உள்ளார். ஆனால் பணம் கொடுத்து அரசு வேலையில் சேரலாம் என்ற ஆசை வார்த்தையில் மயங்கி உள்ளார். சென்னை நாவலூரை சேர்ந்த ரஞ்சித் குமார் (39) என்ற மோசடி நபர் சீனிவாசனை சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாற்றி உள்ளாராம்.
சப்-இன்ஸ்பெக்டர் வேலையை தன்னால் வாங்கி தரமுடியும் என்று கூறிய ரஞ்சித் குமார், கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை வங்கி கணக்கு மூலமாக ரூ.18 லட்சம் வரை சீனிவாசனிடம் இருந்து பணத்தை வாங்கினாராம். சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான போலியான அரசு ஆவணங்களையும் சீனிவாசனிடம் ரஞ்சித்குமார் கொடுத்தாராம். அது போலியான அரசாணையை உண்மை என்று நம்பி காவல்துறை அதிகாரிகளிடம் அதுகுறித்து சீனிவாசன் கேட்டுள்ளார்.
அப்போதுதான் போலி அரசாணைகளை கொடுத்து சீனிவாசனிடம் ரஞ்சித் குமார் ரூ.18 லட்சத்தை அபகரித்தது அவருக்கு புரிந்தது. இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த சீனிவாசன் ரூ.18 லட்சத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று ரஞ்சித் குமாரை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ரஞ்சித் குமார் தனது செல்போனை 'சுவிட்ச்-ஆப்' செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் சீனிவாசன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தான் மோசம் போனது குறித்து புகார் அளித்தார்.
வேலைக்கே போகாமல் 37.5 லட்சம் சம்பளம்.. அரசு உயர் அதிகாரியின் மனைவிக்கு இறுதியில் நடந்த ட்விஸ்ட்
சீனிவாசன் கொடுத்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மோசடி நபர் ரஞ்சித் குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் ரெடிமேடாக பல்வேறு அரசு வேலைகளுக்கான போலி அரசாணை நகல்கள் ஏராளமாக இருந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சீனிவாசனை போல ஏராளமான பட்டதாரி வாலிபர்கள் ரஞ்சித்குமார் விரித்த மோசடி வலையில் வீழ்ந்து பணத்தை இழந்திருக்கலாம் என போலீசார் நம்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications