வேலைக்கே போகாமல் 37.5 லட்சம் சம்பளம்.. அரசு உயர் அதிகாரியின் மனைவிக்கு இறுதியில் நடந்த ட்விஸ்ட்
டெல்லி: ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண், நிறுவனங்களில் வேலை செய்யாமல், ₹37.5 லட்சம் சம்பளம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இவர் யார் என்றால், ராஜஸ்தான் மாநில தகவல் தொழில்நுட்பத் துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் பிரத்யுமன் தீட்சித்தின் மனைவி பூனம் தீட்சித் ஆவார். பிரத்யுமன் தீட்சித் அரசுக்கு சொந்தமாக ராஜ்காம்ப் இன்ஃபோ சர்வீசஸ் லிமிடெட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி மீது வேலையே செய்யாமல் பல லட்சம் சம்பளம் வாங்கியதாக சர்ச்சை வெடித்துள்ளது.
ராஜ்காம்ப் இன்ஃபோ சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள ஒரு ஆலோசனை அமைப்பாகும்.. இது ராஜஸ்தான் மாநில அரசுக்கு முழுமையாகச் சொந்தமானது ஆகும். இந்த அமைப்பு தான் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் பிரத்யுமன் தீட்சித் பல நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதாகவும், அதற்கு பிரதிபலனாக பிரத்யுமன் தீட்சித்தின் மனைவி பூனம் தீட்சித்திற்கு வேலையே செய்யாமல் பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் முழு பிரச்சனையும் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு இந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரணையைத் தொடங்கியது.
இரண்டு நிறுவனங்கள்
லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையின்படி, ராஜஸ்தான் மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குநரான பிரதியுமன் தீட்சித் தனது மனைவி பூனம் தீட்சித் மூலம் சட்டவிரோத பணத்தைப் பெற்றுள்ளதாக புகார் எழுந்தள்ளது. அவர் ஓரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் மென்பொருள் லிமிடெட் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்க டெண்டர் வழங்கி உள்ளார். அந்த நிறுவனங்களின் ஊழியராக பூனம் தீட்சித் தவறாகக் காட்டப்பட்டிருக்கிறாராம். இந்த தகவலை என்டிடிவி நிறுவனத்தின் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
அரசு டெண்டர்
அதாவது அரசு துறை இயக்குநரான பிரதியுமன் தீட்சித், தனது அரசுப் பதவியைப் பயன்படுத்தி, இரண்டு தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு, ஒப்பந்தங்களை அனுமதித்துள்ளார். இதற்கு பிரதிபலனாக, அந்த நிறுவனங்கள் தன்னுடைய மனைவி பூனம் தீட்சித்தை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும், அவருக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
37.5லட்சம் சம்பளம்
லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடத்திய விசாரணையில், ஜனவரி 2019 முதல் செப்டம்பர் 2020 வரை, இந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் பூனம் தீட்சித்தின் ஐந்து தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ₹37,54,405 பணத்தை அனுப்பியுள்ளன. இந்த பணம் கணக்குகளில் 'சம்பளம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு நிறுவனம் பூனம் தீட்சித்திற்கு வழக்கமாக சம்பளம் என்ற பெயரிலேயே வழங்கியுள்ளது. மற்றொரு நிறுவனம், கொடுப்பனவுகளை 'ஃப்ரீலான்சிங்' வேலை என்று கூறி சம்பளத்தை கொடுத்துள்ளது. பூனம் தீட்சித் சம்பளம் வாங்கிய இந்த காலகட்டத்தில் இரண்டு நிறுவனங்களும் ராஜஸ்தான் மாநில அரசின் டெண்டர்களை பெற்றன.
மனைவிக்காக கணவனின் வேலை
இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பூனம் தீட்சித் எந்த அலுவலகத்திற்கும் ஒரு நாள் கூட வேலைக்கே செல்லவில்லை. பிரதியுமன் தீட்சித் தான், தனது மனைவியின் போலி வருகைப் பதிவேடுகளை தனிப்பட்ட முறையில் அங்கீகரித்ததாக விசாரணை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம், அரசு உயர் அதிகாரி பிரத்யுமன் தீட்சித் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மனைவி மூலம் தனியார் நிறுவனங்களிடமிருந்து சட்டவிரோதப் பணம் பெற்றுள்ளார் என்பதுதான் மிகப்பெரிய குற்றச்சாட்டு. இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடந்து வருவதால் அம்மாநில அரசு அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications