சென்னையில் ஏற்பட்டது நிலநடுக்கம் அல்ல.. தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு மையம் சொன்ன முக்கிய தகவல்! இதோ
சென்னை அண்ணாசாலையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு மையம் புதிய தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை அண்ணா சாலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று காலையில் திடீரென ஏற்பட்ட நிலஅதிர்வால் கட்டடங்கள் குலுங்கியதாக கூறிய ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். மேலும் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் தான் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டதா? இல்லையா? என்பது பற்றி மத்திய அரசின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் விரிவான விளக்கம் அளித்துள்ளது.
துருக்கி நாட்டில் சில நாட்களுக்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான சிரியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக நிலநடுக்கம் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க இந்தியாவிலும் வடமாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் நிலநடுக்கம் வீரியமிக்கதாக இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பாதிப்புகள் ஏற்படாமல் உள்ளது.

சென்னையில் நிலஅதிர்வு
மேலும் இந்தியாவில் நிலநடுக்க பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் பற்றிய பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தியாவை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் எனவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தான் சென்னை அண்ணா சாலை ஒயிட்ஸ் ரோடு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இன்று காலை சுமார் 10 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் அலறியடித்து ஓட்டம்
இதனால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில் பயந்துப்போன ஊழியர்கள் அலறியடித்தபடி அலுவலகங்களில் இருந்து வெளியே ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர் நிலநடுக்கம் என்பதை மறுத்தனர்.

வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன?
இதுபற்றி வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், ‛‛சென்னையில் நில அதிர்வு ஏதேனும் பதிவாகி உள்ளதாக என டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தில் கேட்கப்பட்டது. அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை'' என தெரிவித்தார். டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் என்பது இந்தியாவில் ஏற்படும் நிலஅதிர்வுகளை பதிவு செய்து வருகிறது.

தேசிய நிலஅதிர்வு மையம் புது தகவல்
இந்நிலையில் தான் தற்போது தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு மையம் புதிய தகவலை தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த மையம் ‛‛சென்னையில் நிலநடுக்கம், நிலஅதிர்வு என எதுவும் ஏற்படவில்லை. நிலநடுக்கம், நிலஅதிர்வு என்பது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணரப்படாது. மாறாக மக்கள் நிலஅதிர்வை உணர்ந்திருந்தால் அது வேறு காரணங்களால் நடந்திருக்கலாம்'' என தெரிவித்துள்ளது. அதாவது நிலஅதிர்வு ஏற்பட்ட இடத்தில் பூமியை தோண்டுதல், ஏதேனும் வெடிபொருட்கள் பயன்படுத்தினால் அதனை சுற்றிய பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்படலாம் என்ற வகையில் தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ மறுப்பு
இந்நிலையில் தான் தற்போது சென்னையில் மெட்ரோ பணிகள் நடக்கின்றன. சுரங்கும் தோண்டும் பணிகளுக்கும் நடைபெற்று வருகிறது. இதனால் மெட்ரோ பணிகள் காரணமாக நிலஅதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை. இதனால் நிலஅதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணமாக இருக்காது என சென்னை மெட்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் நிலஅதிர்வை உணர்ந்ததாக மக்கள் கூறும் நிலையில் அதற்கான காரணம் என்ன? என்பது புரியாத புதிராக உள்ளது. இதனால் மக்கள் குழம்பி உள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications