"கரண்ட் பில்"லுல மாற்றம் வருது.. ஷாக்கடிக்குதா இபி கட்டணம்.. மின்வாரியம் அதிரடி.. "ஸ்மார்ட்" ஒர்க்
சென்னை: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.. இதுகுறித்த முக்கிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன... இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..
வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும்.. வழக்கமாக, ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கே நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கிறார்கள்..
முறைகேடுகள்: அவர்கள் கணக்கிட்டு எழுதும் யூனிட் அடிப்படையில் பொதுமக்கள் மின்சார கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.. ஆனால், இதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் இந்த நடைமுறைக்கு பதில் மின்சார பயன்பாடு அளவை மிக எளிதாக, துல்லியமாக கணக்கிட 'ஸ்மார்ட் மீட்டர்' இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக 'சர்வர்' உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதுவும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் ..
ஊழியர்கள்: அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது.. அதற்கான கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும். ஒருவேளை கடைசி தேதிக்குள் மின்கட்டணத்தை நுகர்வோர் செலுத்தவில்லையென்றால், மின் விநியோகம் தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். பிறகு நுகர்வோர் கட்டணம் செலுத்தியதும் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.. ஆனால், விடுமுறை தினங்கள், இரவு நேரங்களில் இணைப்பு துண்டிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இது வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்பை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று அதாவது திங்கட் கிழமை ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்பட்டது.
ஸ்மார்ட் மீட்டர்: இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தருமபுரி உள்பட தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு 2-வது, 3-வது கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளனவாம்.. இதில் முதல்கட்டமாக 13 மாவட்டங்களில் 1 கோடியே 17 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்படுத்தப்படும் என்றும், 2-வது கட்டமாக 1 கோடியே 2 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், 3-வது கட்டமாக சுமார் 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு: இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த 45 நாட்களில் இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்... குறிப்பிட்ட காலத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் தான் மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியத்தை பெற முடியும் என்றும் சொல்கிறார்கள்..!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications