"ஷாக்"கடிக்கும் கரண்ட் பில் தகவல்.. மின்வாரியம் அதிரடி.. வாடகை வீட்டுக்காரர்களுக்கு முக்கிய வார்னிங்
சென்னை: வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மின்வாரியமும், காவல்துறையும் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.. என்ன காரணம்?
மின்சார வாரியத்தில் சமீபகாலமாகவே புகார்கள் கிளம்பி வருகின்றன.. மின்வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
அதனால்தான், நேற்று முன்தினம், மின்சார துறை கடும் எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்திருந்தது.. யாராவது லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது..

லஞ்சம்: அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழை வாங்க வேண்டும் என்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியாகவே உள்ளது... நேர்மையான அதிகாரிகள் இதில் விதி விலக்காக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.. அதேசமயம், சிலர் லஞ்சம் வாங்கி சிக்குவது அதிகரித்து வருகிறது.. இவர்கள் மீது துறை வாரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், லஞ்சத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை..
அதனால்தான், லஞ்சம் பெறும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது..
மின்பகிர்மானம்: இது தொடர்பாக மின்சார வாரியம் அறிக்கையும் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ''சேவை இணைப்புகளை வழங்க அதிகாரிகளும் ஊழியர்களும் லஞ்சம் கோருவதும் வாங்குவதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: இப்படிப்பட்ட சூழலில், வாடகை வீட்டில் குடியிருப்போர்களை குறிவைத்து, மோசடிகள் நடப்பது அம்பலமாகி உள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தை சேர்ந்தவர் சாத்தூரப்பன்... இவருக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் 2 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு வீட்டில் அழகு ராதாகிருஷ்ணன் - குணசுந்தரி தம்பதியர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை, ஒருநபர் இவர்கள் வீட்டுக்கு வந்துள்ளார்.. அப்போது வீட்டில் குணசுந்தரி மட்டுமே இருந்திருக்கிறார். எட்டயபுரம் மின்வாரிய அலுவலகத்தில் தான் வேலை பார்ப்பதாகவும், சாத்தூரப்பன் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார் என்றும், அதனால் புதிய மின் மீட்டரை எடுத்து வந்திருப்பதாகவும் சொல்லி உள்ளார்.. பிறகு, மின் மீட்டரை குணசுந்தரியிடம் தந்துவிட்டு, ரூ.5,100 தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.
5500 ரூபாய்: இதையடுத்து, ஹவுஸ் ஓனரின் அம்மாவுக்கு போன் செய்து நடந்ததை சொல்லி உள்ளார் குணசுந்தரி.. அந்தம்மாவும், பணத்தை இப்போதைக்கு தந்துவிடுங்கள்.. மகன் வந்ததும், திருப்பி தருகிறேன் என்று கூறியுள்ளார்.. அதன்படியே வாடகைக்கு குடியிருந்த குணசுந்தரி 5500 ரூபாய் தந்துள்ளார்..
மின்ஊழியரும் சில்லறை மாற்றி தருவதாக சொல்லிவிட்டு போயுள்ளார்.. ஆனால், நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை. அதற்குபிறகுதான், சந்தேகமடைந்த குணசுந்தரி, எட்டயபுரம் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லவும், அவர்களோ, அப்படி யாருமே இங்கு வேலை பார்க்கவில்லை, யாரையும் தாங்கள் அனுப்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.. இதற்கு பிறகு, குணசுந்தரி போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளார்..
குள்ள நபர்: போலீசாரும் அந்த நபரை தேடி கொண்டிருக்கிறார்கள். வெள்ளை கலர் ஷர்ட், பேண்ட் அணிந்து, அந்த நபர் குள்ளமாக இருந்தாராம்.
இதையடுத்து, போலீஸார் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.. புதிய மின் மீட்டரை யார் கொண்டு வந்து பொருத்துவதாக சொன்னாலும், வாடகை வீட்டில் இருப்பவர்கள், உடனடியாக வீட்டு ஓனருக்கு தகவல் சொல்ல வேண்டும் என்றும், அப்படி அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கே நேரடியாக போன் செய்து உறுதி செய்யுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதே எச்சரிக்கையை மின்வாரியமும் பொதுமக்களிடம் விடுத்து, ஜாக்கிரதையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications