சூடுபிடிக்கும் விசாரணை! ஆருத்ரா மோசடி வழக்கில்.. "3000" பக்க குற்றப்பத்திரிகை ரெடி! போலீஸ் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டையே அதிர வைத்து ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 3000 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மாநிலம் முழுக்க ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை அமைந்தகரையில் இதன் தலைமை அலுவலகம் அமைந்திருந்தது.
இதற்கிடையே ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அது குறித்து விளம்பரப்படுத்தினார்கள். அதில் முதலீடு செய்வோருக்கு 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக அறிவித்தார்.

வங்கிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக வட்டி என்பதால் அதை நம்பி, பல ஆயிரம் பேர் இதில் முதலீடு செய்தனர். இப்படியே சுமார் 2400 கோடி ரூபாயைப் பொதுமக்களிடம் இருந்து வசூலித்துள்ளனர். முதலில் சில மாதங்களுக்கு அவர்கள் முறையாகவே வட்டி கொடுத்துள்ளனர். இதனால் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வரவில்லை. இருப்பினும், அதன் பிறகு முறையாக வட்டி தரவில்லை. முதலீடு செய்தவர்கள் பணத்தை எடுக்க விரும்பினால் அதையும் முறையாகத் தரவில்லை எனத் தெரிகிறது.
பல மாதங்களுக்கு இதே தொடர்ந்தது. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி ஆருத்ரா இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆருத்ரா நிறுவனத்திற்குச் சொந்தமான பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகியும் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநருமான ஹரிஷ் என்பவரை கைது செய்தனர். மேலும், தொடர்ந்து பலர் கைதாகினர்.
இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களும் தெரிய வந்தது. அதாவது பாஜகவில் பொறுப்பைப் பெற முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தைப் பயன்படுத்தியாக ஹரீஷ் வாக்குமூலம் அளித்திருந்தது. மேலும், அந்த பணத்தை பாஜகவில் சிலருக்கு வழங்கியதாகவும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதில் பிரபல நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர் கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே சுமார் ரூ.2438 கோடி தொடர்புடைய ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளனர். இந்த வழக்கு நடந்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் 3000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை ஹரீஷ் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. மொத்தம் 61 இடங்களில் நடந்த சோதனையில் ₹6.35 கோடி பணம், ₹1.13 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. மேலும், 22 கார்கள், வங்கிக் கணக்கில் இருந்த ₹96 கோடி டெபாசிட், ₹103 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications