சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனியும் ஊரடங்கு தொடர்ந்தால் தமிழக பொருளாதாரம் அடியோடு சரியும்.. பொருளாதார நிபுணர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் அடியோடு சரிந்து தமிழக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இபாஸ் முறையை ரத்து செய்யாதது, பொதுபோக்குவரத்து இல்லாதது போன்ற காரணங்களால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழில்கள் நலிவடைந்துவிட்டன.

சிறிய தொழில் செய்பவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாகனத்தில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருப்பதால் லாபத்தை இழக்கிறார்கள். வருமானத்தையும் இழந்து தவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் மக்கள் அவசர அத்தியாவசிய தேவைக்கு கார்களில் தான் செல்ல முடியும் என்பதால் பெரிய அளவில் பணம் கொடுத்து செல்ல முடியாத நிலையில் உள்ளார்கள்.

மாணவர்களின் கல்வியாண்டை வீணடிக்கக் கூடாது.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்மாணவர்களின் கல்வியாண்டை வீணடிக்கக் கூடாது.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

வருமானத்துக்கு வழியில்லை

வருமானத்துக்கு வழியில்லை

ஊரடங்கு தடை உத்தரவு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொது போக்குவரத்து தடை என்பது மக்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் தடையாக உள்ளது. சிறு தொழில் வைத்திருப்பவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு எடுத்த செல்ல முடியாத நிலையில் உள்ளனர். வாடகை வாகனம் மூலம் கொண்டு சென்றால் வாடகைக்கே அவர்களின் வருமானம் போய்விடுகிறது. இதனால் உற்பத்தியாகும் பொருட்கள் வீணாகுவதோடு வருமானத்துக்கு வழி இல்லாமல் தவிக்கின்றனர்.

வணிகர்கள் பாதிப்பு

வணிகர்கள் பாதிப்பு

இன்னொரு பக்கம் வணிகர்கள் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் வருவாய் இழந்து தவிக்கிறார்கள். ஊரடங்கும், பொதுப்போக்குவரத்து தடையும் அடுத்த மாதமும் நீட்டிக்கப்பட்டால் வறுமையான நிலைக்கு தள்ளப்படுவோம் என்று மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

வாடகையும் இல்லை

வாடகையும் இல்லை

இது ஒருபுறம் எனில் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலை இழந்து இளைஞர்கள் பலர் தவிக்கிறார்கள். வணிக நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளதால் நகர்புற மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. வேலை இல்லாமல் பலர் ஊருக்கு சென்றுவிட்டதால் வாடகையை நம்பி மட்டுமே வாழ்ந்து வந்த குடும்பங்கள் இப்போது தவிப்புக்கு உள்ளாகி உள்ளன.

டாஸ்மாக்கில் குவியும் பணம்

டாஸ்மாக்கில் குவியும் பணம்

தமிழகத்தில் பலர் சம்பாதிக்கும் குறைந்த பணத்தையும் டாஸ்மாக் கடையில் போய் கொட்டி விடுகிறார்கள். பெரும்பாலான குடும்பங்கள் வறுமையில் சிக்கி தவிக்க இது முக்கிய காரணமாக உள்ளது. ஒருபக்கம் வறுமை இன்னொரு பக்கம் குடிபோதைக்காக அதிக செலவு செய்வது போன்ற காரணங்களால் தமிழக மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது. பெரும் பொருளாதார அழிவை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

உணவுக்கு வழியிருக்காது

உணவுக்கு வழியிருக்காது

இனியும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பார்கள் என்றும் பலர் உணவுக்கு கஷ்டப்படும் நிலை வந்துவிடவும் வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

English summary
Economists have warned that the curfew imposed by the Tamil Nadu government could cause the economy to collapse and the people of Tamil Nadu to lose their livelihoods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X