கிளாம்பாக்கம்.. கோயம்பேட்டை விடுங்க.. ஈசிஆரில் வரும் புது பஸ் நிலையம்.. என்ன காரணம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ECR இல் புதிய பேருந்து முனையத்தை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) நெரிசல் மிகுந்த இடத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்கு பதிலாக இந்த பேருந்து நிலையத்தை மாற்றும் முடிவை எடுத்துள்ளது.

தென் தமிழ்நாட்டிற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காகவே கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் புறநகர் பேருந்து நிலையங்கள் உள்ளன. ஆனாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் இடிக்கப்பட உள்ளதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது செயல்பாட்டிற்கு வந்து உள்ளது.

ECR to get a new bus stand near Mamallapuram amid teh Kilaampakkam Bus Stand operation

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக, கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய பேருந்து முனையமாக இந்த பேருந்து முனையம் அனைத்து வசதிகளுடன் சிஎம்டிஏ-வால் அமைக்கப்பட்டிருக்கிறது.

எனவே, சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தந்த வகையில் இங்கிருந்து இயங்கும் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும்.

எங்கே செல்லும்?: பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். அதேபோல தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும்.

எப்படி இயங்கும்: கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.

ஈசிஆர் பேருந்து நிலையம்: இப்படிப்பட்ட நிலையில்தான் ஈசிஆரில் இன்னொரு பேருந்து நிலையத்தை பிரம்மாண்டமாக கட்ட முடிவு செய்துள்ளனர். மாமல்லபுரம் நகருக்கு வெளியே ECR இல் அமைய உள்ள இந்த புதிய பேருந்து முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டரை CMDA வெளியிட்டு, அடுத்த மாதம் நவம்பர் மாதத்திற்குள் ஒப்பந்ததாரரை இறுதி செய்யும் என்று அறிவித்துள்ளது.

சிஎம்டிஏ அமைச்சர் பி.கே சேகர் பாபு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டினருக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக இருந்தாலும், மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதை மாற்ற முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் புதிய பேருந்து நிலையத்தின் இடத்தைப் பார்வையிட்ட சேகர்பாபு, பயணிகளுக்கு எளிமையான பயண அனுபவத்தை அளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்தை கட்டுவோம் என்று கூறியுள்ளார்.

அதன்படி 6.79 ஏக்கரில் 27,500 சதுர மீட்டர் பரப்பளவில் மொத்தம் ₹67 கோடி செலவில் புதிய பஸ் டெர்மினஸ் திட்டம் தொடங்கப்படும் என சிஎம்டிஏ தரப்பு தெரிவித்துள்ளது. இரண்டு மாடி கொண்ட பேருந்து முனையத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் பார்க்கிங், தரைத்தள கடைகள், டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் காத்திருப்பு அறைகள் மற்றும் முதல் தளத்தில் அலுவலக அறைகள், தங்குமிடங்கள், பணியாளர்கள் ஓய்வு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+