ஜெகஜ்ஜால மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்- மேலும் ஒரு வழக்கில் அமலாக்கப் பிரிவால் அதிரடி கைது!
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
டெல்லி : ரூ.200 கோடி மோசடி வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் மற்றொரு வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மோசடி புகார்களில் சிக்கிய மோசடி மன்னன் சுகேஷ் எனும் சுகேஷ் சந்திரா எனும் சுகேஷ் சந்திரசேகர். இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத் தருவதாக கூறி ரூ50 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கியவர். தற்போது வரை 20க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் சுகேஷுக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், அங்கிருந்தபடியே தில்லாலங்கடி வேலைகளை அரங்கேற்றி வந்தார். தொழிலதிபர் மனைவியிடம் கணவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக சொல்லியே ரூ200 கோடி மோசடி செய்த திடுக்கிடும் வழக்கும் சுகேஷ் மீது நிலுவையில் இருக்கிறது.
சுகேஷ் சந்திராவின் கூட்டாளியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் செயல்படார் என்பதும் போலீசாரின் குற்றச்சாட்டு. நடிகைகள் நோரா பதேகி, அருஷா பட்டில், சோபியா சிங் ஆகியோரும் சுகேஷ் வழக்கில் சாட்சியங்களாக உள்ளனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சுகேஷ் சந்திரா அழைத்துவரப்பட்ட போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் புகார் கூறினார். ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ60 கோடி பணம் கொடுத்தேன் எனவும் பரபரப்பை கிளப்பினார்.
டெல்லி திஹார் சிறையில் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் சுகேஷ். இந்த நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றொரு வழக்கில் சுகேஷ் சந்திராவை கைது செய்துள்ளனர். தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூ3.5 கோடி மோசடி செய்தார் என்பது அமலாக்கப் பிரிவின் புதிய வழக்கு. இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு சுகேஷ் சந்திராவை கைது செய்துள்ளது. மேலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சுகேஷிடம் 9 நாட்கள் விசாரணை நடத்தவும் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக நேற்று முன் தினம் நீதிமன்ற வாசலில் வைத்து நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரா, காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்தது செய்தியானதும் குறிப்பிடத்தக்கது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications