அடுத்த “டார்கெட்” தலைமை செயலகம்.. அமைச்சர் பொன்முடி அறைக்கு சீல் வைக்க ED முடிவு! நாளை சோதனையா?
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொன்முடியின் அலுவலகத்துக்கு சீல் வைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று உள்ளனர்.
செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, சென்னை சைதாபேட்டையில் இருக்கும் அவரது வீடு, அவரது மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கௌதம் சிகாமணி அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, பொன்முடியின் இளைய மகனும் மருத்துவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவருமான அசோக் சிகாமணிக்கு சொந்தமான மருத்துவமனை என அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் அமைச்சர் பொன்முடி, மனைவி, மகன் அசோக் சிகாமணி ஆகியோர் இருக்கும்போதே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். அத்துடன் வீட்டில் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். வங்கி அதிகாரிகளும் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
ரூ.70 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், முக்கிய ஆவணங்கள் போன்றவை இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
அங்கு சுமார் 3 மணி நேரமாக அமைச்சரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே 15 மணி நேரம் கழித்து விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடைபெற்ற வரும் சோதனை முடிவுக்கு வந்தது. அதே நேரம் விழுப்புரத்தில் பொன்முடியின் கல்வி நிறுவனங்கள், சைதாப்பேட்டை வீட்டில் சோதனை தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இரவே தலைமைச் செயலகத்தில் உள்ள பொன்முடியின் அலுவலகத்துக்கு சீல் வைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைந்து உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications