ரெய்டு முடிந்த கையோடு.. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை! பரபரப்பு
சென்னை: அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் மற்றும் அவரது மகன் வீட்டில் நேற்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டை நடத்தினர். நேரு வீட்டில் நடந்த சோதனை நேற்று முடிந்த நிலையில், பிற இடங்களில் ரெய்டு இன்றும் தொடர்ந்தது. இதற்கிடையே இப்போது அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
நேற்று காலை அமைச்சர் நேருவின் சகோதரருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் சென்னை அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வங்கி கணக்கில் இருந்து நடந்த பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே ரெய்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

நேரு வீட்டில் நடந்த சோதனை நேற்று முடிந்த நிலையில், பிற இடங்களில் ரெய்டு இன்றும் தொடர்ந்தது. இதற்கிடையே அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்காக அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
நேற்றைய தினம் கே.என்.நேரு, அவரது சகோதரர் மற்றும் அவரது மகன் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்தச் சூழலில் தான் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.என்.நேருவின் உறவினர்கள் வீட்டில் தொடர்ந்து சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் தமிழகம் முழுதும் 20 இடங்களில் ரெய்டு நடந்தது. கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான டிவிஹெச் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்தது.
அதன்படி சென்னை பிஷப் கார்டன் பகுதியில் கே.என்.ரவிச்சந்திரனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் டிவிஹெச் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications