திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் அமலாக்கத் துறை ரெய்டு! பரபரக்கும் சென்னை பாண்டி பஜார்
சென்னை: சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
பாண்டி பஜாரில் திலக் தெருவில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் எனும் நிறுவனம் உள்ளது. இங்குதான் தற்போது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அது போல் சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள தமிழக டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், எஸ்என்ஜே நிறுவனத்திலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்திலும் ரெய்டு சென்னையில் மட்டும் 4 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.
அது போல் காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி மற்றும் கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் சக்திவேல், செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கரின் வீடு இருக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் 5 கார்களில் வந்த 20 பேர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
செந்தில் பாலாஜி மீது குறி வைப்பதற்காகவே கரூரில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications