பிரதமர் விசிட்டுக்கு அடுத்த நாள் ரெய்டில் இறங்கிய ED! அமைச்சர் நேருவின் சகோதரர் நிறுவனத்தில் ரெய்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். இவர் வந்து சென்ற மறுநாளே அதிரடியாக ரெய்டில் இறங்கியிருக்கிறது அமலாக்கத்துறை. இன்று காலை முதல் அமைச்சர் நேருவின் சகோதாரருக்கு சொந்தமான TVH நிறுவனத்தில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நேருவின் சசோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான அடையாறு எம்.ஆர்.சி.நகரில் உள்ள TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சகோதரர் மட்டுமல்லாது நேருவின் மகனுக்கு சொந்தமான இடங்களில் என 10க்கும் மெற்பட்ட இடங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் பயணத்தை ஒட்டி ரெய்டில் ED இறங்கியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

Nehru Tamil Nadu Enforcement Directorate

வங்கி கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் TVH நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் இன்று அதிரடி ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. காலை முதல் நேருவின் சகோதரர் மற்றும் மகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது மறைந்த மற்றொரு சகோதரரான ராமஜெயம் வீட்டிலும் ரெய்டு மெற்கொள்ளப்பட்டிருப்பதாக தவகல்கள் வெளியாகியுள்ளன.

ரெய்டு நடைபெற்று வருவதால் அது முடிந்த பின்னரே முழு விவரங்கள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+