திமுக எம்பி ஜெகத்ரட்சகனின்...ரூ. 89.19 கோடி சொத்து... அமலாக்கத்துறை முடக்கம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் ரூ. 89.19 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அரக்கோணம் திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ED seizes Rs. 89.19 Crores properties of DMK MP Jagathrakshakan

இதையடுத்து வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ஜெகத்ரட்சகனின் சொத்துகளை முடக்கி, பெமா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி நிறுவனத்தை ஜெகத்ரட்சகன் வாங்கியது தொடர்பான வழக்கை ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். குவிட்டன்தாசன் என்பவர் அளித்த புகாரின் கீழ் இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதுதொடர்பான வழக்கு நீதிபதி என்.சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் விசாரணை மேற்கொள்ள, ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, அவரது மகன், மகள், மைத்துனர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இவர்கள் யாரும் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதையடுத்து ஜெகத்ரட்சகன் சார்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் அவர்களுக்கு கொரோனா என்றும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்கும் ஜெகத்ரட்சகன் ஓய்வில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் முன்பு அவரது மகன் சந்தீப் ஆனந்த் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+