சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சூப்பர் முதல்வராமே".. நாங்க எதை சொன்னாலும், இந்த திமுக இப்படிதான்.. போட்டு தாக்கும் எடப்பாடியார்

திமுக அரசு மீது காட்டமான விமர்சனம் முன்வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: "இந்த திமுக அரசு செய்ய தவறியதாக நாங்கள் எதைக் கூறினாலும், இப்போதைக்கு தான் ஆட்சிக்கு வந்ததாக கூறுகின்றனர்.. ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே சூப்பர் முதல்வர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டு பெருமை கூறியவர்கள் இவர்கள்" என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

திமுக அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. இது தொடர்பாக அடிக்கடி அறிக்கைகளையும் விடுத்து வருகிறார். அந்த வகையில், இப்போதும் ஒரு அறிக்கை விடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதில் உள்ளதாவது:

"தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங் கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன அதிமுக சார்பில் சென்னை மாநகர் சென்னை புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்து மூழ்கி இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன.

வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தன்... புறநானூறு பாடலைப் பாடி வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தன்... புறநானூறு பாடலைப் பாடி வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும். நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். மிக கன மழையினால் மாநிலத்தின் அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைகளில் இருந்தும் ஏரிகளில் இருந்து உபரி நீர் அப்படியே ஆறுகளில் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வேளாண் நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் சாலைகள் மூழ்கி உள்ளதோடு, சிறு, சிறு தடுப்பணைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.

நிவாரணம்

நிவாரணம்

இந்நிலையில் திமுக அரசு நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் ஆக உயர்த்தி வழங்கி விட வேண்டும். மறு சாகுபடி செலவிற்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும் ,அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் ,முக்கியமாக தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் விலைகளையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

பயிர்க்கடன்

பயிர்க்கடன்

மழையினால் பாதிக்கப்பட்ட ஊரக சாலைகள் உட்பட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீர் செய்யவேண்டும், உரங்கள், விதைகள் போன்றவை நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்த விதமான நிபந்தனையும் இன்றி கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் கணக்கு உறக்கமின்றி விவசாய பணிகளை மேற்கொள்ள வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும், வீடுகள் உயிரிழந்த கால்நடை மற்றும் கோழிகளுக்கு இழப்பீடு அறிவித்து வழங்க வேண்டும்.

 மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளித்திட வேண்டும், கால்நடைகளுக்கும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் ,மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக 5 ஆயிரம் ரூபாயைக் கொடுக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். இந்த திமுக அரசு செய்ய தவறியதாக நாங்கள் எதைக் கூறினாலும் இப்போதைக்கு தான் ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகின்றனர். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தான்; ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் தான் இப்போதும் உள்ளனர்.

 சூப்பர் முதல்வர்

சூப்பர் முதல்வர்

அதிமுக ஆட்சியில் நிழல் அரசாங்கத்தை நடத்தி உடனுக்குடன் அறிக்கை வெளியிட்டவர்கள், ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே சூப்பர் முதல்வர் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டு பெருமை கூறியவர்கள், அம்மாவின் அரசு கொண்டுவந்த நிறைவேற்றிய பல தொழில் முதலீடுகளையும் திட்டங்களை 30 நாட்களுக்குள் கொண்டு வந்ததுபோல் பெருமை பேசியவர்கள், இவர்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் நீர் வழித்தடங்களை தூர்வாராமலும்,பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் , ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அம்மாவின் அரசு மீது பழி போட்டு தப்பிக்க முயல்வது தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

English summary
Edapadi Palanisamy request flood relief aid should be provided immediately, and statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X