Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நம்ம ஸ்கூல் திட்டம்" எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல்.. அன்பில் மகேஷ் விரிவான பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'நம்ம ஸ்கூல்' திட்ட தொடக்க விழாவிற்காக ஒரேநாளில் ரூ. 3 கோடி செலவு செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி கூறுவதெல்லாம் ஆதாரமற்றது என்றும், திமுக அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் ரூ. 50 கோடி கிடைத்துள்ளதை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சல் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல், ஓராண்டு முழுமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு, ஆய்வு கூட்டங்களுக்கும் சேர்த்தே ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவுக்கு ஆதாரமாய் விளங்கும் பள்ளிக்கூடங்களை வலுப்படுத்தவும், கல்வித் தரத்தை மேலும் உயர்த்தவும் முதலமைச்சரின் வழிகாட்டலில் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ள "நம்ம ஸ்கூல்" என்னும் "நம்ம ஊர்ப் பள்ளி திட்டத்திற்கு" ஒரே நாளில் ரூ.50 கோடி நன்கொடை வந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாத வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விடுத்திருக்கும் அர்த்தமற்ற அறிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது.

திராவிட மாடல் அரசின்கீழ், பரந்துபட்ட சமூகத்தின் இலட்சியங்களுக்குச் செவிசாய்க்கும் பொதுக் கல்வி முறையை நோக்கி தமிழ்நாடு இன்று நகர்ந்துகொண்டிருக்கிறது. சமூகநீதியை உள்ளடக்கிய கல்வி, பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் பள்ளியோடு தொடர்புடைய சமூகத்தைப் பள்ளிக்குப் பொறுப்பாக மாற்றுவது போன்ற அனைத்தையும் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இந்த அரசு உறுதிபூண்டு, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 நம்ம ஸ்கூல் திட்டம்

நம்ம ஸ்கூல் திட்டம்

அண்மையில் உருவாக்கப்பட்ட 'நம்ம ஸ்கூல் - நம்ம ஊர்ப் பள்ளி' போன்ற ஒரு திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. திமுக அரசு உறுதியாகக் கடைப்பிடிக்கும் கொள்கைகளின் வழி இயல்பாக உருவாக்கப்பட்ட திட்டம் இது. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக உள்ளூர்ச் சமூகம் முன்வர வேண்டும் என்றால் அரசும் பொதுமக்களும் இணைவது அவசியம் என்கிற புரிதலோடும் உயர்ந்த நோக்கத்தோடும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதாரமற்றவை

ஆதாரமற்றவை

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை; தவறாக முன்வைக்கப்பட்டுள்ளவை - ஏன் போலியானவை என்றே கூற விரும்புகிறேன். எல்லாவற்றையும் விட, அவரது அறிக்கையானது அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவும், அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளின் கல்வித் தரத்தை வலுப்படுத்தவும் திமுக அரசின் நோக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு, இதோ துறை அமைச்சர் என்ற முறையில் எனது பதில்கள்!

அன்பில் மகேஷ் பதிலடி

அன்பில் மகேஷ் பதிலடி

கேள்வி: முந்தைய அரசு சிஎஸ்ஆர் பங்களிப்புகளிலிருந்து நிதியுதவி பெறுவதற்காக ஓர் இணைய தளத்தை உருவாக்கியதா?

பதில்: முந்தைய அரசு இணைய தளம் உருவாக்குவதாக அறிவித்தாலும் - அது வெளிப்படையானதாக இல்லை. பல்வேறு குறைபாடுகளில் சிக்கித் திணறியது. பள்ளிக் கல்வித் துறைக்கு / பள்ளிகளுக்கு வர வேண்டிய நன்கொடைகளை மாநில அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழகமே பெற்றுக் கொண்டது. எனினும் அந்த நிதியுதவியைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கான ஒரு நம்பத்தகுந்த கட்டமைப்போ வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வழிமுறையோ அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்படவில்லை.

திமுகவின் திட்டம்

திமுகவின் திட்டம்

அத்திட்டம் மிகப் பலவீனமாகவும் மேலோட்டமாகவும் இருந்தது. குறைபாடுகளுடன் கூடிய ஒன்றைத் தொடர இயலாது என்னும் நிலையில், மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருந்தது. திமுக அரசில் துவங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம் சிஎஸ்ஆர் மூலமாகப் பெறப்படும் நிதி மட்டுமல்லாது, முன்னாள் மாணவர்கள் - புரவலர்கள் - தனிநபர்கள் போன்றவர்களிடம் இருந்து பெறப்படும் நிதியை நிர்வகிக்க எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

யாரால் நிர்வகிக்கப்படும்?

யாரால் நிர்வகிக்கப்படும்?

பள்ளிக் கல்வித் துறையிலும் நிதித் துறையிலும் உள்ள மூத்த அதிகாரிகளை இயக்குநர்களாகக் கொண்ட ஒரு குழுவால் இத்திட்டம் நிர்வகிக்கப்பட உள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் இத்திட்டத்தின் கௌரவத் தலைவராக இருப்பார்.

 அப்பட்டமான பொய்

அப்பட்டமான பொய்

கேள்வி: நிதி பெறும் முயற்சிகள் மூலமாக முந்தைய அஇஅதிமுக அரசு ரூ.84 கோடி வரை நிதியுதவியைப் பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் தனது அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையா?

பதில்: 2017ல் தொடங்கியதாகக் கூறுகிறார் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால் 18.09.2019 முதல் 22.04.2021 வரையிலான காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட ஒட்டுமொத்த நிதி, வட்டியுடன் சேர்த்து, ரூ.9,78,416 மட்டுமே. இந்தத் தொகை M/S TNSPTA CSR Fund என்கிற பெயரிலிருந்த பொது சேமிப்புக் கணக்கில் சேர்ந்துள்ளது. எனவே 84 கோடி ரூபாய் நிதி சேர்ந்தாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. அப்பட்டமான பொய்! அந்த 84 கோடி ரூபாய் எங்கே என்பதை அரசு பொறுப்பில் அப்போது இருந்த எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ரூ.3 கோடி செலவு?

ரூ.3 கோடி செலவு?

கேள்வி: நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளி தொடக்க விழாவிற்காக ரூ.3 கோடி செலவு செய்யப்பட்டதா?

பதில்: நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளி தொடக்க விழாவிற்காக ரூ.3 கோடி செலவு செய்யப்பட்டதாக் கூறுவது அபத்தமானது. ஓராண்டு முழுமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு, ஆய்வு கூட்டங்களுக்கும் சேர்த்தே ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக அடிப்படை ஆதாரமற்ற - அபாண்டமான பொய் மூட்டைகளை அறிக்கையாக விடுவது துரதிர்ஷ்டவசமானது. திமுக அரசின் புதிய திட்டத்திற்கு வரும் நன்கொடையாளர்களையும் தடுக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் பொருத்தமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+