30 நிமிடம் எங்கும் நகராத எடப்பாடி! அதிகாலை யாகம்! இங்க பார்த்தா ஓபிஎஸ்.. பதிலுக்கு கோ பூஜை! பரபரப்பு
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு முன்பாக இன்று அதிகாலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் வீட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
அதிகாலையில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் நிகழ்வு நடக்கும் மண்டபத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஆனால் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட முடியாது. பொதுக்குழுவை நடத்த நேற்று உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த போதிலும் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் இன்று அதிகாலை எடப்பாடி பழனிசாமி வீட்டில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக பொதுக்குழு குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பில், ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டத்தில் என்ன செய்யலாம், எதை பற்றி பேசலாம், எப்படி நம்முடைய பலத்தை காட்டலாம் என்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்துள்ளார்.

பொதுக்குழு
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு முன்பாக ஓபிஎஸ், இபிஎஸ் வீட்டில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. எடப்பாடி வீட்டில் இன்று அதிகாலை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தீர்ப்பு எதிராக வந்தாலும் எடப்பாடி தரப்பு உற்சாகமாகவே இருக்கிறது. பொதுக்குழுவில் உள்ள நிர்வாகிகள் எல்லாம் நம் பக்கம்தான் இருக்கிறார்கள். இதனால் பொதுக்குழுவில் நம்முடைய பலத்தை காட்ட முடியும்.

சாதகம்
நமக்குத்தான் எல்லாம் சாதகமாக முடியும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகமாக இருக்கிறது. இந்த உற்சாகத்திற்கு இடையில்.. எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்து எடப்பாடி வீட்டில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு உள்ளது. இன்று காலை எடப்பாடி பழனிசாமி 30 நிமிடம் விடாமல் ஒரே இடத்தில அமர்ந்து.. நீண்ட நேரம் பூஜையில் கலந்து கொண்டார். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் வீட்டில் கோ பூஜை நடத்தப்பட்டது.

பூஜை
ஓபிஎஸ் தரப்பு தனக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உற்சாகத்தில் சக நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார். அதோடு காலையில் வீட்டிற்குள் மாடு கொண்டு வரப்பட்டு சிறப்பு கோ பூஜை நடத்தப்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் ஆன்மீக ரீதியாக வேண்டுதல்களை மேற்கொண்டு, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நோக்கி விரைந்துள்ளனர்.

என்ன நடக்கும்?
பூஜைக்கு பின்பாக அதிமுக பொதுக்குழுவை நோக்கி இன்று எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டார். எடப்பாடி பழனிசாமி காரில் ஏறும் முன் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் சார்பாக பூர்வ கும்ப மரியாதை கொடுத்தனர். அவரின் வீட்டிற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் கூடி உள்ளனர். ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு வெளியிலும் தொண்டர்கள் குவிந்து உள்ளனர். ஓபிஎஸ் இன்னும் சற்று நேரத்தில் தனது வீட்டில் இருந்து பொதுக்குழுவிற்கு கிளம்ப உள்ளார்.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications