நீங்க கூட்டணிக்கு வாங்க.. நான் சப்போர்ட் பண்றேன்.. வெளிப்படையாக கேட்ட எடப்பாடி.. விஜய் சொன்ன பதில்
சென்னை: தமிழக அரசியலை உலுக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் நம்மிடம் பேசுகையில்.. கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.

எடப்பாடி விஜய் பேசியது என்ன?
மேலும், பிரச்சாரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திப்பதாகவும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார் என்று அதிமுக வட்டாரம் தெரிவித்தது. இந்த அழைப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக அதிமுக வட்டாரம் தெரிவித்தது.
இந்த அழைப்பில், எடப்பாடி பழனிசாமி கரூர் சம்பவத்திற்கு தனிப்பட்ட வகையில் விஜயிடம் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முழு ஆதரவையும் வழங்கினார் என்று கூறப்படுகிறது.
மேற்குப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மூத்த அதிமுக தலைவர் இது பற்றி நம்மிடம் கூறுகையில், விஜய் எடப்பாடி பேசியது உண்மைதான். கூட்டணிக்கு வாருங்கள் என்று எடப்பாடி கூறினார். உங்களுக்கு முழு சப்போர்ட் கொடுக்கிறேன் என்று எடப்பாடி கூறினார். இதற்கு விஜய் பாசிட்டிவ்வாக பேசி உள்ளார். 2026 பொங்கலுக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என்று அந்த மூத்த அதிமுக தலைவர் தெரிவித்தார்.
விஜய் எடப்பாடி நெருக்கம்
கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை மாநாட்டிலும், அதன்பின் நடந்த சுற்றுப்பயணங்களிலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். ஜெயலலிதாவின் கட்சி பாஜகவிற்குதான் அடகு வைக்கப்பட்டுவிட்டதாக விமர்சனம் செய்து இருந்தார்.
இப்போது அதே விஜய் அதிமுகவின் உதவியை நாடி இருக்கிறார். அதோடு இல்லாமல் .. ஆந்திர பிரதேசத்தில் எப்படி சந்திராபாபு நாயுடுவுக்கு பவன் கல்யாண் வலது கை போல இருக்கிறாரோ அதே போல்தான் தமிழ்நாட்டில் விஜய் எடப்பாடிக்கு வலது கை போல உருவெடுப்பார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி திட்டம் என்ன?
இந்த நிலையில்தான் எடப்பாடி - விஜய் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருவதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது விஜயை நாமும் சேர்ந்து அழுத்தினால் அவர் பெரிய சக்தியாக வளர்ந்துடுவார். அது நமது எதிர்காலத்திற்கு சிக்கல். இப்போது அவருக்கு ஆதரவு கொடுத்தால் அவர் நம்முடன் இருப்பார். இது நமக்கு ஆதரவாக முடியும் என்று நினைக்கிறாராம்.
அதோடு விஜய் அரசியல் முடிய கூடாது என்று நினைக்கிறாராம். விஜய் அரசியலில் இருக்க வேண்டும். நமக்கு கூட்டணி வைக்கவும் வலுவான முகம் தேவை. விஜயகாந்த் இருந்திருந்தால் செய்ய வேண்டியதை விஜயை வைத்து செய்யலாம்.
ஆனால் அவர் நம்மை விடவும் அதிகமும் வளர கூடாது. தேர்தல் நேரத்தில் கூட்டணி கேட்டிருந்தால் 100+ இடங்களை கேட்டிருப்பார். இப்போது சிக்கல் இல்லை. அவர் பேரம் பேசும் இடத்தில் இல்லை. அவருடன் இப்போது வலுவான நபர்கள் இல்லை. இப்போது அவருக்கு உதவியாக நாம் நிற்கலாம். 30-40 இடங்கள்தான் கொடுப்போம் என்று கூறி அவரை சம்மதிக்க வைக்கலாம். அவரை நாம்தான் வழிகாட்ட வேண்டும். வேறு தலைவர்கள் அவருக்கு இல்லை என்று எடப்பாடி நினைக்கிறாராம்.












Click it and Unblock the Notifications