நாங்க சொன்னா முதல்வருக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது.. வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்!
சென்னை: 25 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என நல்ல நோக்கத்தோடு நாங்கள் சொன்னால், முதல்வருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது என விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
சட்டசபையில் இன்று: இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த விவாத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையால் இஸ்லாமியர்கள் முன் விடுதலை ஆவது தடைப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் கூறுகின்றனர். 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகளின் வயது மூப்பு, உடல்நலக்குறைவு, குடும்ப வேண்டுகோள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனப் பேசினார்.

அவருக்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை என்ற தோற்றத்தை அதிமுகவினர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள், அது போலியானது. எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த அக்கறையுடன் பேசினார். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது கண்ணை மூடிக்கொண்டிருந்தற்கு என்ன காரணம்? தருமபுரியில் பேருந்தை எரித்தவர்களை முன்விடுதலை செய்த உங்கள் ஆட்சி, இஸ்லாமிய சிறைவாசிகளை ஏன் விடுதலை செய்யவில்லை? திடீர் பாசம் ஏன்? என அனைவருக்கும் தெரியும்." எனப் பேசினார்.
அதிமுக வெளிநடப்பு: இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை குறித்து பேச அனுமதிக்கவில்லை என்பதால் அதிமுக வெளிநடப்பு செய்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் பதில் அளிக்கும் போது இதற்கு உண்டான பதில் அளித்து இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் இஸ்லாமியர்கள் மீது அதிமுகவுக்கு ஏன் திடீர் பாசம் என கேள்வி எழுப்பினார். அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என கூறினார். ஆனால் அதற்கு சட்டப் பேரவை தலைவர் எனக்கு பதில் அளிக்க அனுமதிக்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
இஸ்லாமியர்களுக்காக அதிமுக: ரமலான் நோன்புக்கு ஆண்டுதோறும் 5400 டன் அரிசி, ஹஜ் பயணம் மேற்கொள்ள 8 கோடி நிதி, ஹஜ் இல்லம், உலமாக்களுக்கு ஓய்வூதியம், நாகூர் தர்கா குளக்கரை சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களை அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்காக கொண்டு வந்தது. சட்டப்பேரவை தலைவர் எங்களை பேச அனுமதி தராத காரணத்தால்தான் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உக்கடம் கோட்டை மேட்டில் ஆயிரக்கணக்கான காவலர்கள் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த 19 பேர் இறந்தார்கள். கொஞ்சம்கூட ஈவு இறக்கமின்றி 19 பேரை சுட்டு வீழ்த்தியதுதான் திமுக அரசு. கோவை குண்டு வெடிப்பில் சிறையில் இருந்த மீரான் என்ற சிறைவாசி அதிமுக ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டார். பாபர் மசூதி இடிக்கும் போது இந்தியாவே பற்றி எரிந்தது. ஆனால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது.
கோபம் பொத்துக்கிட்டு வருது: எந்த ஒரு சிறுபான்மை மக்களும் பாதிக்காத அளவுக்கு அதிமுக அரசு இருந்தது. இஸ்லாமியரான அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக்கியது அதிமுகதான். எதிர்த்து வாக்களித்தது திமுகதான். இவர்கள் இஸ்லாமியர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள் என்பதை இஸ்லாமியர்கள் எண்ண வேண்டும்.
முதலமைச்சர் இவ்வளவு கோபப்படுவதற்கு என்ன காரணம்? 25 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என நல்ல நோக்கத்தோடு நாங்கள் சொன்னால், எங்கள் மீது முதல்வருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இவர்கள் தான் சிறுபான்மை பாதுகாவலர்களா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!











Click it and Unblock the Notifications