சம்மட்டி அடி.. எடப்பாடி சொன்னதை கடைசி வரை கேட்காத அப்பாவு.. இப்போ எட்டி கூட பார்க்கலையே.. ஜெ ஸ்டைலா?
சென்னை: தமிழ்நாடு சட்டசபைக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. நேற்று கருப்பு சட்டை அணிந்து ஓ பன்னீர்செல்வம் அருகே அமர்ந்து இருந்த எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபைக்கு வரவில்லை.
தமிழ்நாடு சட்டசபை சுவாரசிய திருப்பங்களுடன் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த கூட்ட தொடரின் தொடக்கத்திலேயே ஆளுநர் ஆர். என் ரவி உரை காரணமாக அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநர் உரைக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததும், ஆளுநர் பேசிய உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது.

அதிமுக
அதன்பின் ஓ பன்னீர்செல்வம் இருக்கை விவகாரம் காரணமாக அவையில் மறுநாளே அமளி ஏற்பட்டது. அதிமுகவில் தற்போது தேர்தல் ஆணைய விதிப்படி ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனால் ஒருங்கிணைப்பாளரை இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியில் இருந்து நீக்க முடியாது. அதனால் சட்டப்படி ஓ பன்னீர்செல்வம் இப்போதும் எதிர்கட்சித் துணை தலைவர்தான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வைக்கும் வாதத்தில், ஓ பன்னீர்செல்வத்திற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. ஆர்பி உதயகுமார்தான் எதிர்க்கட்சி துணை தலைவர் என்று வாதம் வைத்து உள்ளார்.

மோதல்
இதற்காக எடப்பாடி சார்பாக, ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த கோரிக்கையை வைத்தது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் கடந்த கூட்டத்தொடரிலும், இன்று தொடங்கிய கூட்டத்தொடரிலும் இருக்கைகள் மாற்றப்படவில்லை. இரண்டு தரப்பும் வைத்த கோரிக்கையால் இன்னும் அப்பாவு இருக்கைகளை மாற்றவில்லை.

இருக்கை பிரச்சனை
இதனால் நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கருப்பு சட்டையில் வந்தது. எடப்பாடி உட்பட அவரது அணியினர் எல்லோரும் கருப்பு சட்டையில் அவைக்கு வந்து இருந்தனர். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் மட்டும் வெள்ளை உடையில் வந்து இருந்தார். எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரும் நேற்று அவையில் அருகருகே அமர்ந்து இருந்தனர். நேற்று முதல்நாள் எடப்பாடி தரப்பு இதற்காக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனி கோரிக்கை வைத்தது. இருப்பினும் கூட அப்பாவு எடப்பாடி தரப்பின் கோரிக்கையை ஏற்கவில்லை.

வேறு வழி
இந்த நிலையில்தான் நேற்று வேறு வழியின்றி எடப்பாடி ஓ பன்னீர்செல்வம் அருகிலேயே அமர்ந்து இருந்தார். என்ன சொல்வது என்று தெரியாமல் ஓ பன்னீர்செல்வம் அருகிலேயே அமைதியாக, நெளிந்தபடி அமர்ந்து இருந்தார். பக்கத்திலேயே ஓபிஎஸ் இருக்கிறார். இப்போது அவர்தான் தனக்கு பரம எதிரி என்பதால் எடப்பாடி என்ன செய்வது என்று தெரியாமல் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் இன்றோ ஓ பன்னீர்செல்வம் பக்கம் அமர இஷ்டம் இன்றி அவைக்கே வராமல் எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார். இன்று சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் எடப்பாடி அவைக்கு வரவில்லை. பொதுவாக ஜெயலலிதாதான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அவைக்கு வருவதை தவிர்ப்பார்.. மொத்தமாக கூட்டத்திற்கே வருவதை கூட அவர் தவிர்ப்பார். இந்த நிலையில் தற்போது எடப்பாடியும் தான் கேட்டது நடக்கவில்லை என்றதும் அவையை தவிர்த்து உள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications