அரசியல் காழ்ப்புணர்ச்சி.. விடியா அரசின் பழிவாங்கும் செயல்- பாஸ்கர் வீட்டில் ரெய்டால் கொதித்த ஈபிஎஸ்!
சென்னை : திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு, இந்த விடியா அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் தான் எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து அதிரடி ரெய்டுகளை நடத்தி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து சோதனை செய்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடிக்கு நெருக்கம்
கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் கே.பி.பி.பாஸ்கர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

ஈபிஎஸ் கண்டனம்
இந்நிலையில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் நடைபெறும் ரெய்டு ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு, இந்த விடியா அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வீட்டிலும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார்.

எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
நாமக்கல் தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். 2016 - 2021ஆம் ஆண்டு வரை கேபிபி பாஸ்கர் அவரது மனைவி உமா ஆகியோர் சட்டவிரோதமாக நிலம், நகை, சொத்துகள் வாங்கியது லஞ்ச ஒழிப்பு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் சொத்துக்கள் மட்டுமே பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 7.5 கோடி ரூபாயாக அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

315% அதிகம்
மேலும் 7.5 கோடி ரூபாய் சொத்து மதிப்பில் சட்டரீதியாக வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் நகைகளை தவிர சட்டவிரோதமாக 4.72 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது கேபிபி பாஸ்கரின் வருமானத்தை விட 315% அதிகம் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications