சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடந்த ஆண்டைப்போல்.. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 கொடுங்கள்.. எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டது. அப்போது தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டு தவணையாக மொத்தம் 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டை போல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வகை தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழ்நாடு முதல்வராக இருந்தபொழுது, எனது தலைமையிலான தமிழக அரசு, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது.

அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து.. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு என்னென்ன அதிகாரங்கள்? அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து.. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு என்னென்ன அதிகாரங்கள்?

நோய்த்தொற்று பரவல்

நோய்த்தொற்று பரவல்

மேலும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த, குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்கீழ், சென்னையில் காவல் ஆணையாளரும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் ஆதரவோடு நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

விலையில்லா உணவுப்பொருட்கள்

விலையில்லா உணவுப்பொருட்கள்

இக்காலகட்டத்தில் தினக் கூலிகள், ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்வாதார சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்குத் தமிழக அரசு பல்வேறு விலையில்லா உணவுப் பொருட்கள் மற்றும் ரொக்க நிவாரண நிதி போன்றவை வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.

நிவாரணம் அறிவியுங்கள்

நிவாரணம் அறிவியுங்கள்

தற்போது தினந்தோறும் 33 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைகிறார்கள். அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தினக் கூலிகள், ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை, எளிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.

சிறப்பு உணவுத் தொகுப்பு

சிறப்பு உணவுத் தொகுப்பு

எனவே, கடந்த ஆண்டு எனது தலைமையிலான தமிழக அரசு மேற்குறிப்பிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை வழங்கியது போல், உடனடியாக 2,000 ரூபாய் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை கொரோனா நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Former Tamil Nadu Chief Minister and Leader of the Opposition Edappadi Palanisamy has demanded that relief be provided to all workers, including unorganized workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X