எடப்பாடி செய்த 3 தவறு.. டீம் போட்டு காலி செய்த சீமான் + அண்ணாமலை.. இவ்வளவு நடக்குதா பின்னாடி!
சென்னை: அதிமுகவின் வாக்குகளை அண்ணாமலை, சீமான் இருவரும் பிரிக்க போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி இதை உணராமல் இருக்கிறார், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 3 வாரம் முன் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக ஏபிபி - சி வோட்டர் கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.
தமிழ்நாடு - 39 இடங்கள்.
திமுக இந்தியா கூட்டணி- 39(52%)
பாஜக கூட்டணி - 00(19%)
அதிமுக - 00(23%)
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதிமுக வசம் இருந்த ஒரு தொகுதியான தேனியும் திமுக பக்கம் செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
திமுகவின் வாக்கு சதவிகிதம் 52 வரை செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜக கூட்டணி - 00(19%) வாக்கு சதவிகிதம் பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜகவை விட அதிகமாக அதிமுக - 00(23%) வாக்குகளை பெறும் கணிப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு லோக்சபா தேர்தல் கணிப்புகளில் தமிழ்நாட்டில் பாஜக 2- 10 இடங்கள் வரை கூட வெல்லும் என்று கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் இப்போது தேர்தலுக்கு 1 வாரம் கூட இல்லாத நிலையில் எல்லா இடங்களிலும் ஆளும் திமுகவே வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படி சர்வேக்கள் பல வெளியாகும் நிலையில் தமிழ்நாட்டில் அதிமுகவின் நிலை குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேட்டி அளித்துள்ளார்.
அதில்., பாஜக வாக்குகள் அதிமுகவிற்கு சென்றுள்ளன. எடப்பாடி பழனிசாமி இதை உணரவில்லை. அதிமுக வாக்கு நாம் தமிழருக்கும் செல்கிறது. பறையர்கள், வண்ணார் , குயவர்கள், போன்றவர்கள் நாம் தமிழருக்கு செல்கின்றனர். நாயுடு, பிற மொழியாளர்கள், பிராமணர்கள் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு செல்கின்றனர். தமிழ் தேசியம், இந்துத்துவா இரண்டும் அதிமுகவை அடிக்கிறது.
இந்துத்துவா இந்த முறை வலிமையாக இருக்கிறது. இது அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுக இதனால் கண்டிப்பாக பெரிய அளவில் ஆதிக்கப்படும். பன்னீர்செல்வத்தை நீங்கியதால் முக்குலதோர் வாக்குகள் அதிமுகவிற்கு எதிராக செல்கின்றன. வெறும் வெள்ளாள கவுண்டர் கட்சியாக எடப்பாடிக்கு எதிராக அதிமுக மாறி உள்ளது.
வன்னியர்களை ஆதரிக்க நினைத்தது பறையர்கள், வண்ணார் , குயவர்கள், போன்றவர்கள் இன்னும் பல பிரிவினர்களை பகைத்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி., இவர்கள் எல்லாம் எடப்பாடிக்கு எதிராக உள்ளனர். எடப்பாடிக்கு கூட்டமே இல்லை. பன்னீரை நீக்கியது தவறு, பாஜகவை விரட்டியது தவறு, பாமகவை நீக்கியது தவறு. இதெல்லாம் எடப்பாடி செய்த மூன்று பெரிய தவறுகள்.
எடப்பாடி உடன் காங்கிரஸ் வராது. பாஜகவையும் விட்டுவிட்டார். விசிகவை நினைத்துக்கொண்டு பாமகவை விட்டுவிட்டார் எடப்பாடி. இப்படி பல தவறுகளை எடப்பாடி செய்து இருக்கிறார். அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சரிவால் சீமான் வேகமாக முன்னேறி வருகிறார். சீமான் தொடர்ந்து தனியாக நிற்கிறார். வெற்றியோ தோல்வியோ அவர் தனியாக நிற்கிறார். அவரின் அரசியல் வெல்வதால்தான் 3 சதவிகித வாக்கு வைத்து இருந்தவர் தற்போது 7 சதவிகித வாக்குகளை பெறும் அளவிற்கு முன்னேறி உள்ளார். வன்னியர் இடங்களில் கூட சீமானுக்கு சாதகமான நிலை உள்ளது.
அதிமுகவின் வாக்குகளை அண்ணாமலை, சீமான் இருவரும் பிரிக்க போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி இதை உணராமல் இருக்கிறார், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications