ஜெ. இருந்திருந்தா இப்படி பண்ணுவீங்களா? கோபம் கொண்ட எடப்பாடி.. சட்டென கேட்க.. விக்கித்த தலைகள்
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவினருடன் தொகுதி வாரியாக இரண்டாம் கட்ட ஆலோசனையை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதில் பல சுவாரசியமான சம்பவங்கள்.. நடந்து வருகிறதாம்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. .
ஆலோசனை; இதையடுத்தே நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவினருடன் தொகுதி வாரியாக இரண்டாம் கட்ட ஆலோசனையை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. முதல் கட்ட ஆலோசனையில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம், மனம் திறந்து பேசலாம் ; எவ்வித கட்டுப்பாடும் இல்லை என சொல்லப்பட்டதால் மாவட்ட நிர்வாகிகள் பலரும் மா.செ.க்களுக்கு எதிராகவும், மாஜி மந்திரிகளுக்கு எதிராகவும் மடை திறந்தார் போல் பேசினர்.
ஒரு கட்டத்தில், வேட்பாளர்கள் தேர்வில் தலைமையே (எடப்பாடி பழனிச்சாமி) சறுக்கி விட்டது என்கிற தொணியில் அவர்களின் பேச்சும் இருந்தது. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எடப்பாடி உள்ளிட்ட சீனியர்கள், மா.செ.க்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
வேறு விவகாரங்கள் பேச வேண்டாம்: இந்த நிலையில்தான், இரண்டாம் கட்ட ஆலோசனையில், தேர்தல் தோல்வி குறித்து மட்டும் பேசுங்கள் ; வேறு விவகாரங்கள் பேச வேண்டாம். 2026 தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனை சொல்லுங்கள். தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுங்கள். அம்மா (ஜெ.) இருந்திருந்தால் தலைமைக்கு எதிராக பேசுவீர்களா? என்றெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி ஆகியோர் கோபம் காட்டியிருக்கிறார்கள்
திமுக குழு: இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே திமுகவில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து பணிகளை திமுக துவக்கி யிருப்பது குறித்து, ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் சீனியர்களிடம் ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, ஆளும் கட்சியாக இருப்பதால் சில முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள். இப்போதே தேர்தல் பணிகளைத் துவக்குங்கள் என நாம் சொன்னால், பெரிய தாக்கம் எல்லாம் இருக்காது.
நம்ம ஆட்களும் (அதிமுகவினர்) அவ்வளவாக சீரியஸ் காட்ட மாட்டார்கள். அதனால், திமுக தரப்பில் என்னென்ன நடக்கிறது என்பதை கவனிக்கலாம். அதற்கேற்ப நம் கட்சியினரை செயல்படுத்த முனையலாம். இப்போது குழுவெல்லாம் போடுவதால் பலனில்லை என்று சீனியர் சிலர் சொல்ல, மேலும் சிலரோ, கட்சியினருக்கு வேலை கொடுக்காமல் அமைதியாக இருந்தால் சோம்பேறித்தனம் வந்து விடும். அதனால் குறைந்த பட்சம் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மாற்று கட்சிக்குப் போனவர்களை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வருவது போன்ற விசயங்களை கவனிக்கச் சொல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால், அதிமுகவிலும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகள் நடக்கத்தொடங்கியிருக்கிறது.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக்












Click it and Unblock the Notifications