வெகுண்டு எழுந்த 6 பேர்.. இப்படியே போனால் எடப்பாடியை நீக்கிடுவாங்க.. அடித்து சொன்ன அரசியல் எக்ஸ்பர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 6 மாஜி அமைச்சர்கள் எடப்பாடியை போய் சந்தித்து இருக்கிறார்கள் போல,இப்போது 6 பேர் எடப்பாடியை எதிர்க்கின்றனர். அடுத்த முறை 12 பேர் கூட வரலாம். எடப்பாடி பழனிசாமி இவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை எதிர்த்தால் எடப்பாடியை நீக்கிவிடுவார்கள். எடப்பாடியை பொதுக்குழுவை கூட்டி நீக்கிவிடுவார்கள். அடுத்து அதுதான் நடக்கும், என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதிமுகவின் செல்வாக்கு சரியும் நிலையில் அதிமுக மாஜி அமைச்சர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

aiadmk edappadi palanisamy

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன்இந்தியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி தன்னை எதிர்க்கட்சி தலைவர்.. லோக்சபா தேர்தலில் வென்று காட்டுகிறேன் என்று நம்பிக்கையாக இருந்தார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம். நமக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும். திமுக கூட்டணி உடையும் என்று எடப்பாடி நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதிமுக படுதோல்வி அடைந்தது. அதோடு இல்லாமல் எடப்பாடியை 10 தோல்வி பழனிசாமி என்று அழைக்கும் நிலை ஏற்பட்டது.

அவர் அதிமுக ஒன்றாக இருக்கிறது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி எல்லாம் தனி ஆட்கள் என்கிறார். அப்படி என்றால் தெற்கில் அதிமுக எப்படி சரிந்தது. 8 சதவிகித வாக்குகள் எப்படி காலியானது. அதிமுக தெற்கில் எப்படி மோசமாக சொதப்பியது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி எல்லாம் தனி ஆட்கள் என்றால் அதிமுக வாக்குகள் ஏன் சரிகிறது. கொங்கு மண்டலத்திலேயே எடப்பாடி வெற்றிபெற முடியவில்லையே? அவர் தலைவராக இருக்கலாம் ஆனால் அவருக்கு கீழ் ஆட்கள் இருக்க வேண்டும்.

நான்தான் எல்லாம்.. நான் அடுத்த ஜெயலலிதா என்றெல்லாம் பேச தொடங்கிவிட்டார். தன்னை ஜெயலலிதா உடன் எடப்பாடி ஒப்பிட தொடங்கிவிட்டார். தமிழ்நாடு முழுக்க ஏற்றுக்கொள்ள கூடிய அளவிற்கு எடப்பாடி பிரபலமான தலைவர் கிடையாது. கட்சி நிர்வாகிகளை, நீக்கப்பட்டவர்களை, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி இருக்கிறார். அவர் பொதுக்குழுவை கூட்டி இருக்க வேண்டும். கட்சி ஒன்றிணைய வேண்டுமா? நிர்வாகிகள் ஒன்றிணைய வேண்டுமா என்று ஆலோசனை செய்திருக்க வேண்டும்.

மணியான மாஜி அமைச்சர்கள் உட்பட 6 மாஜிக்கள் எடப்பாடியை சந்தித்து பேசி உள்ளனர். லோக்கல் தொண்டர்கள் பிரஷர் காரணமாக போய் பேசி உள்ளனர். அவரிடம் நெருக்கமாக இருந்தவர்களே எடப்பாடியிடம் போய் பேசி உள்ளனர். எவ்வளவு நாள் எடப்பாடி நான்தான் எல்லாம் என்று பேசிக்கொண்டு இருக்க முடியும். இடைநிலை தலைவர்கள் இதை புரிந்து கொண்டனர். வேலுமணி கூட இதை புரிந்து கொண்டார். அவரே தனியாக இருந்தது தப்பு என்றார்.

அவர்கள் புரிந்து கொண்டனர். இப்படியே போனால் அதிமுக ஒன்றும் இல்லாமல் போயிடும். விஜய் வேறு வருகிறார். அவர்களின் வாக்குகளை பிடிக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் இவர்கள் எடப்பாடியை போய் சந்தித்து இருக்கிறார்கள் போல. எடப்பாடியிடம் போய் பேசி இருக்கிறார்கள் போல. இப்போது 6 பேர் எடப்பாடியை எதிர்க்கின்றனர். அடுத்த முறை 12 பேர் கூட வரலாம்.

எடப்பாடி பழனிசாமி இவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை எதிர்த்தால் எடப்பாடியை நீக்கிவிடுவார்கள். எடப்பாடியை பொதுக்குழுவை கூட்டி நீக்கிவிடுவார்கள். அடுத்து அதுதான் நடக்கும், என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+