ஒரே ஒரு கம்ப்யூட்டர்.. தூசி தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை.. எடப்பாடி மீதான மெகா வழக்கு மீண்டும் விசாரணை!
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த 2016-2021 ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுக பல்வேறு டெண்டர் முறைகளை செய்து உள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாக தற்போதைய ஆட்சியில் வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

முக்கியமாக பல்வேறு டெண்டர் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. முக்கியமாக அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018லேயே ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டது.
மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்தாக புகார் வைக்கப்பட்டது. முக்கியமாக வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது. அதோடு பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக புகார் உள்ளது.
மேலும் ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச் சாலை 715 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1500 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல் . திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் 4 வழிச் சாலை விரிவாக்க 720 கோடி ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று புகார் வைக்கப்பட்டது.
மீண்டும் விசாரணை: கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக, புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிஏஜி அறிக்கை: இந்த நிலையில்தான் கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன. அதை இவர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.
டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு உள்ளன. அதாவது அனுபவம் வாய்ந்தவர்களை வைத்து டெண்டர் விடாமல் மேம்போக்காக டெண்டர் விட்டு உள்ளனர். ஒரே கம்பெனிகள் டெண்டர்களில் கலந்து கொண்ட போது வேறு கம்பெனிகள் அதில் கலந்து கொள்ளவில்லை.

சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்பியூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் அர்த்தம் உள்ளே இருந்து கொண்டே சிலர் டெண்டருக்கு விண்ணப்பம் செய்து உள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் வேறு வேறு நிறுவனங்களுக்கு ஒரே சமயத்தில் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது.
இவர்கள் லாபத்தை பங்கிட்டுக்கொள்ள வர்த்தக குழு அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்படி விடப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு 14 கோடி ரூபாய் என்றும், டெண்டர்களின் மதிப்பு 15 கோடி ரூபாய் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல் 51 கோடி ரூபாய் வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications