ஆ! தேர்தலுக்கு 1 வருடத்திற்கு முன்பே.. பிரச்சனைகளை எல்லாம் தீர்த்த எடப்பாடி! ஒரே விஷயம்தான் பாக்கி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் இருக்கும் நிலையில்.. கட்சியின் பிரச்சனைகளை பெரும்பாலும் தீர்த்து உள்ளார். அரசியலில் தான் பெரிய சாமர்த்தியசாலி என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார். அடுத்தடுத்து அவர் எடுத்த முடிவுகள் மூலம் கட்சியில் நிலவி வந்த பெரும்பாலான பிரச்சனைகளை தீர்த்து உள்ளார்.

முதல் விஷயம்

முதலாவதாக தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் இதற்காக எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இரண்டாவது சம்பவம்

அதிமுக மோதல் முடிவு - அதிமுகவின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிட மாட்டோம். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் எப்போதும் தலையிடப்போவதில்லை. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி, இருவருக்குமே பலனளிக்கக் கூடியது; யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றி பிறகுதான் பேச இருக்கிறோம்., ஆட்சி அமைப்பது, ஆட்சியில் பங்கு என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம் என்று அமித் ஷா கூறி உள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ் , செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி ரூட் கிளியர் ஆகி உள்ளது.

Edappadi Palanisamy makes perfect moves with the BJP AIADMK alliance in Tamil Nadu politics

மூன்றாவது சம்பவம்

அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று கூறி உள்ளார். இதன் மூலம் எடப்பாடிக்கு முதல்வர் வேட்பாளர் பதவி கிளியர் ஆகி உள்ளது.

நான்காவது சம்பவம்

அண்ணாமலை அவுட் - பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அண்ணாமலை நீக்கப்பட்டு 8 வருடமாக கட்சியில் உறுப்பினராக இருக்கும் நயினார் அந்த இடத்தை பிடித்து உள்ளார். 2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவர் தேசிய அரசியலுக்கு செல்வதாக எடப்பாடி - அண்ணாமலை மோதல் இனி இருக்காது.

ஐந்தாவது சம்பவம்

நயினார் முன்னாள் அதிமுக நிர்வாகி. எடப்பாடிக்கும் நட்பானவர். இதனால்.. அதிமுக எளிதாக அவருடன் சீட் ஷேரிங் பற்றி பேச முடியும். கூட்டணி இடங்களை பகிர்வதில் இனி அவருக்கு சிக்கல் இல்லை. அதோடு முக்குலத்தோர் வாக்குகள் இத்தனை காலம் அதிமுகவிற்கு கிடைக்காமல் போன நிலையில் அந்த வாக்குகள் நயினார் நாகேந்திரன் மூலம் அதிமுக கூட்டணி பக்கம் வர வாய்ப்புகள் உள்ளன.

ஆறாவது சம்பவம்

டிடிவி தினகரன் மீதான வழக்கை ரத்து செய்து அவருடன் எடப்பாடி நெருக்கமாகி உள்ளார். இதனால் அந்த பிரச்சனையும் கிளியர். ஓ பன்னீர்செல்வத்துடன் இருக்கும் மோதலை தவிர மற்ற எல்லா பிரச்சனையும் சரி செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+