கேப்பே விடல.. ஓபிஎஸ் டீம் சுதாரிப்பதற்குள் அடுத்த 'ஸ்டெப்'பை எடுத்து வைத்த எடப்பாடி.. பறந்த உத்தரவு!
ஓபிஎஸ் அணியினர் யோசிப்பதற்குள் அடுத்தகட்ட பிளான்களை நோக்கி அடியெடுத்து வைத்துவிட்டது ஈபிஎஸ் தரப்பு.
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த முழு வேகத்தில் பணிகளைத் தொடங்கியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை மார்ச் 5, 6, 7, 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுகவில் நிலவி வந்த ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து பொதுக்குழுவைக் கூட்டி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இந்த பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓபிஎஸ், உயர் நீதிமன்றத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு வராததால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கே சாதகமாக அமைந்துள்ளது. இதையடுத்து, ஓபிஎஸ் அணியினர், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசித்தனர். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சிவில் வழக்கில் கவனம் செலுத்த அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தொண்டர்களிடையே நல்ல பலன்
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பு, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி ஈபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மேலும், தொண்டர்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்காக, பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளனர். ஓபிஎஸ் உடன் பிரச்சனை தொடங்கியது முதலே, தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தி வருகிறார் ஈபிஎஸ். அது தொண்டர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் பொதுக்கூட்டங்களை நடத்தவுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பொதுக்கூட்டங்கள்
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம் ஜெயலலிதாவின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மார்ச் மாதம் 5,6,7 மற்றும் 10,11,12 ஆகிய 6 நாட்கள், ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்', கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பட்டியல்
மார்ச் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மார்ச் மாதம் 10,11,12 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 5 ஆம் தேதி சென்னை ஆர்கே நகர் பகுதியில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூரிலும், முன்னாள் அமைச்சர் தங்கமணி குமாரபாளையத்திலும், உரையாற்ற உள்ளனர். 7 ஆம் தேதி வேலூரில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனும், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதனும், ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் களம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், நேற்று மாலை வரை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சர்களும் சுற்றிச் சுழன்று தேர்தல் பணியாற்றி, பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். இந்த இடைத்தேர்தல் முடிவு வரும் மார்ச் 2ஆம் தேதி வெளியிடப்படும் நிலையில், அடுத்த 2 நாட்களிலேயே, தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications