விஜய்க்காக பாஜகவை கழற்றிவிடும் எடப்பாடி? கண்கள் சிவந்த டெல்லி.. இது மட்டும் நடந்தால்.. போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் விஜய் உடன் அதிமுக கூட்டணி வைக்கும் பட்சத்தில் அதிமுக - பாஜக கூட்டணி முறியும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அதாவது தவெக உடன் கூட்டணி வைத்தால் பாஜக உடன் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்து விடுவார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜயிடம் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

TVK Vijay

கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் வந்தால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என்றும், விஜய் தலைமையேற்கும் அளவுக்கு அதிமுக பலவீனமாகிவிட்டதா எனவும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் வந்தால் பாஜகவிற்கு கல்தா

அப்படி விஜய் தலைமையில் அதிமுக கூட்டணி வைத்தால், பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார்.. பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சியை ஆரம்பித்தார்.. இல்லை விஜய் வந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவேன் என்று சொல்வாரா? நடக்காத ஒன்றை ஏன் பேசுகிறீர்கள்..

அதிமுக பலவீனமாகிக் கொண்டு இருக்கிறது. பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்று சொன்ன போதில் இருந்தே அந்த கூட்டணி பலவீனமாகி கொண்டு தான் இருக்கிறது. வரும் தேர்தல் முடிவில் பார்த்தீர்கள் என்றால் அதிமுக கூட்டணி வெறும் 15 சதவீதத்துக்கு கீழ் தான் வரும்.. என்று டிடிவி தினகரன் கூறினார்.

எடப்பாடி திட்டம் என்ன?

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் விஜய் உடன் அதிமுக கூட்டணி வைக்கும் பட்சத்தில் அதிமுக - பாஜக கூட்டணி முறியும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அதாவது தவெக உடன் கூட்டணி வைத்தால் பாஜக உடன் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்து விடுவார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இங்கேதான் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஈபிஎஸ் பாஜக கூட்டணியை விட்டு விலக முடிவு செய்தால், சில முக்கிய மாற்றங்கள் நிகழலாம். முதலாவதாக, எடப்பாடிக்கு பதிலடி தரும் விதமாக அண்ணாமலை மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அத்துடன், செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது. ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இவர்களுடன் இணையக்கூடும். இது அதிமுகவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கலாம். அதாவது அதிமுகவை காலி செய்யும் வேலைகளில் பாஜக இறங்கலாம். இன்னொரு பக்கம் இப்போது விஜய்க்கு பாஜக ஆதரவாக உள்ளது. பாஜக அல்லாத அதிமுக - தவெக கூட்டணி உருவானால்.. பாஜக விஜய்க்கும் எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+