சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு தான் காரணம்.. ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அறிவித்ததால்தான் தென் மாவட்டத்தில் வெற்றியை இழந்தோம். நீங்கள் தான் எடுத்த முடிவு தான் தோல்விக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி மீது ஓ பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியதாக தகவல்கள் பரவி வருகிறது.

Recommended Video

    EPS Or OPS ? | Who is the Leader of Opposition? of Tamilnadu Legislative Assembly? | Oneindia Tamil

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 66 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியான உருவெடுத்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவில் யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர் யார்.. மாறி மாறி வாக்குவாதம்.. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மே 10க்கு ஒத்திவைப்புஎதிர்க்கட்சி தலைவர் யார்.. மாறி மாறி வாக்குவாதம்.. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மே 10க்கு ஒத்திவைப்பு

    முதல்வர் பதவிக்கு ஏற்பட்ட போட்டியை போல் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி ரேஸில் எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுத்த ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

    சென்னையில் கூட்டம்

    சென்னையில் கூட்டம்

    இந்நிலையில் சென்னையில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற இரு தரப்பினரும் காரசாரமாக விவாதித்துள்ளார். அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாக்குவாதம் நடைபெற்றதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜெ சமாதியில் மோதல்

    ஜெ சமாதியில் மோதல்

    எனினும் கூட்டத்தில் இரு தரப்பு ஆதரவாளர்களும் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தால் நீண்ட நேரம் கூட்டம் நடந்து முடிந்தது. முடிவில் எந்தவித முடிவும் எடுக்காமல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றிருந்தனர். அப்போது இரு தரப்பு தலைவர்களின் தொண்டர்களும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு தான் என மெரினாவிலும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விட்டுக்கொடுக்க முடியாது

    விட்டுக்கொடுக்க முடியாது

    தேர்தல் தோல்வி தொடங்கி ஒருவருக்கு ஒருவர் இரு தரப்பினரும் குற்றம் சாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதியிலும் உழைத்தது யார்? கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்; எப்படி விட்டுக் கொடுப்பது என அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாக சொல்லப்படுகிறது.

     ஓ பன்னீர்செல்வம்

    ஓ பன்னீர்செல்வம்

    அதற்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம் "நீங்கள் செலவு செய்த பணம், கட்சியினுடையது தானே; வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அறிவித்ததால்தான் தென் மாவட்டத்தில் வெற்றியை இழந்தோம். நீங்கள் தான் எடுத்த முடிவு தான் தோல்விக்கு காரணம்" என்று கூறினாராம். இரு தரப்பினர் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தால் முடிவெடுக்காமல் கூட்டம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    English summary
    We lost the victory in the southern district only because of the announcement of the reservation for the Vanniyar . It is rumored that O Panneerselvam has blamed Edappadi Palanisamy for election lost.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X