ஜெயலலிதா மேடம்.. எம்ஜிஆர் ஸ்டைல்.. அதிமுகவை கைப்பற்றும்.. விஜயின் ரியல் தர்மயுத்தம்.. எடப்பாடி ஷாக்
சென்னை: திமுகவை துவைக்க போகிறார்.. திமுகவை எதிர்க்க போகிறார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட தவெக விஜய்.. இப்போது அதிமுகவை கைப்பற்றி வருகிறார். அதிமுகவின் வாக்குகளை மொத்தமாக கைப்பற்றும் வேலைகளை விஜய் செய்து வருகிறாரோ என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அதிமுகவை கைப்பற்ற போகிறேன்.. ஒருங்கிணைக்க போகிறேன் என்று ஓ பன்னீர்செல்வம் டஜன் கணக்கில் தர்மயுத்தம் நடத்தி இருக்கிறார். பல மேடைகளில் தர்மயுத்தம் பற்றி பேசி இருக்கிறார். இன்னும் சில அதிமுக முன்னாள் தலைகள் கூட தர்மயுத்தம் நடத்தி உள்ளனர்.

ஆனால் விஜய் சத்தமே இன்றி அதிமுகவை.. அதாவது அதிமுகவின் வாக்குகளை தன் பக்கம் இழுக்கும் வேலையை விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதற்கு ஈரோட்டில் நேற்று விஜய் பேசிய சில விஷயங்களே உதாரணம்.
விஜய் பேசியது என்ன?
ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், மஞ்சள்... பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்க்னும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவ்சாயத்திற்கு பெயர்போன மண்.
எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க... நீங்க என்ன பண்ணினாலும் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டாங்க.. உங்களை நம்பித்தான் நான் வந்து இருக்கேன். தவெக தொண்டர்கள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளனர். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.
இப்போது இதே மண் அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரிவு செய்யப்படாமல் வறட்சியில் உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவு செய்ய சொன்னால் இவர்கள் அதை செய்யாமல்.. கண்காட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள், என்று விஜய் பேசினார்.
எம்ஜிஆருக்கு உரிமை கொண்டாடிய விஜய்
நேற்று தனது பேச்சில் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு விஜய் உரிமை கொண்டாடினார். அதில், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்கள் எங்களுக்கும் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. நாங்கள் ஒருவழியில் அரசியல் செய்துகிட்டு போகிறோம். நீங்கள் புலம்பி தள்ளுறீங்க.. இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை..என கத்திகிட்டே பயந்து போகும் சிறுவன் மாதிரி இருக்கு.. முதலில் மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க சார்..
தயவு செய்து பெரியார் பெயரை மட்டும் சொல்லி கொள்ளையடிக்காதீங்க, களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவுங்களுக்கும் சம்மந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்க போவது இல்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எதிர்க்க முடியாது.. எங்களுக்கு நிறையா வேலை இருக்கு.. என்று விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
விஜய்யை எப்படி முடக்கலாம் என்று தான் அவர்கள் யோசித்துகொண்டு இருக்கிறார்கள். 24 * 7 என எப்போதும் இதைத் தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் அரசியலே பேச மாட்டுக்கிறார்.. விஜய் கொஞ்ச நேரம் தான் பேசுகிறார். வெறும் 8 நிமிஷம் தான் பேசுறார். நான் ஏன் சார் பேச வேண்டும். தனிப்பட்ட முறையில் பேசுவது தான் அரசியல் என்றால் பேச தெரியாது. தெரியும், உங்களை விட எனக்கு அதிகமாகவே பேச தெரியும். ஆனால் அந்த அரசியல் பேச வரவில்லை
ஜெயலலிதாவை மேடம் என்ற விஜய்
காஞ்சிபுரத்தில் பேசியதை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். மக்களுக்கு இலவசமாக கொடுப்பதை ஏன் விமர்சிக்கிறீங்க.. ஓசி ஓசி என ஏன் சொல்கிறீர்கள். என்ன கேட்பதற்கு யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா.. மக்களுக்கு ஒன்னு என்றால் விஜய் வந்து நிற்பான். மக்களும் இப்படித்தான். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால்.. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள். உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறாதா.. (தொண்டர்கள் இல்லை.. இல்லை..) என்ன சொல்வது கேட்கிறதா?
திமுகவை சிலர் மோசமாக விமர்சனம் செய்வார்கள். ஜெயலலிதா மேடம் கூட அவ்வப்போது திமுகவை கடுமையாக பேசுவார். திமுகவை தீயசக்தி என்று கூட ஜெயலலிதா மேடம் சொல்வார். அப்போதெல்லாம் ஏன் என்று யோசித்தேன். இப்போது புரிகிறது. நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தவெக ஒரு தூயசக்தி.. இங்கே தீயசக்திக்கும் தூயசக்திக்கும் இடையில்தான் போட்டியே, என்று விஜய் கூறி உள்ளார்.
விஜய் அதிமுக அபகரிப்பு
விஜய் ஏற்கனேவே எம்ஜிஆர் புகைப்படத்தை தவெக பேனர்களில் பயன்படுத்த செங்கோட்டையனுக்கு அனுமதி கொடுத்துவிட்டார். இன்னொரு பக்கம் அதிமுகவில் இருந்து வருபவர்களை ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டார். சமீப காலங்களில் எடப்பாடி கூட எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பெரிதாக பேசாத நேரத்தில்.. விஜய் இப்போது அடிக்கடி எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசி வருகிறார்.
இதனால் அதிமுக தரப்பு அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் வாக்குகளை அப்படியே கையில் எடுக்க விஜய் நினைக்கிறாரோ.. எம்ஜிஆர், ஜெயலலிதா வாக்குகளை கட்டுப்பாட்டில் எடுக்க விஜய் நினைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications