பிள்ளையார் சுழி போட்ட எடப்பாடி பழனிசாமி.. கடைசி நிமிஷத்தில் பெரிய மாறுதல்? திமுக கொடியே பறக்கும் போல
சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டேயிருப்பதாகவும், இன்னும் இழுபறியில் உள்ளதால் ஒரு சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றும் பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். மேலும் தவெக விஜய் ஒரு சில விஷயங்களை மாற்றி கொண்டால் மிகசிறந்த அரசியல்வாதியாக உருவெடுப்பார் என்றும் தன்னுடைய கருத்துக்களை அந்தணன் கூறியிருக்கிறார்..
ஒருசிலருக்கு இந்த அரசு மீது அதிருப்தி இருக்கிறது.. ஆனால், திமுக மீது பெரிய அதிருப்தி எல்லாம் கிடையாது.. சென்னையில் தோண்டி தோண்டி போடப்பட்டுள்ள பள்ளங்கள், மழை நீர் தேங்கி கிடப்பது போன்றவைதான் எரிச்சலை தந்துவிடும்.. இந்த குறைபாடுகளை சரிசெய்துவிட்டால், அரசு மீது விமர்சனமே மக்களுக்கு இருக்காது.

இப்படி சின்ன சின்ன குறைகளைதான் அரசு மீது சொல்ல முடியுமே தவிர, நிர்வாக சிக்கல், அரசு எந்திரங்கள் ஸ்தம்பித்து போய்விட்டன என்பது போன்ற பிரச்சனைகள் எழுந்ததில்லை.. அதாவது 60 அல்லது 70 சதவீதம் அளவுக்கு திமுக அரசு சரியாகவே உள்ளது.. அதற்காக ஒரேடியான வெறுப்பு என்பதெல்லாம் திமுக அரசு யாருக்கும் கிடையாது.
எடப்பாடி பழனிசாமி பிள்ளையார் சுழி
இந்த நேரத்தில் விஜய் இங்கே வந்தது மிகப்பெரிய புரட்சியாக உள்ளது.. அவர் அரசியலுக்கு வந்ததுமே சரியான அரசியலை செய்திருந்தால், நிச்சயம் மோசமான விளைவுகளை பல கட்சிகள் சந்தித்திருக்கும்.. ஆனால், விஜய்யும் சரியான அரசியலை செய்யவில்லை என்பதால், திரும்பவும் திமுகவே வருவதற்குதான் வாய்ப்புகள்தான் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வரமுயற்சி நடக்கிறது.. பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது என்றுகூட எடப்படி பழனிசாமி சொன்னார்.. ஆனால், கூட்டணிக்கான இழுபறி நடந்துகொண்டே இருக்கிறது.. ஆளுக்கொரு பக்கம் டிமாண்டுகளை வைத்து வருவதால் அதிமுக-விஜய் தரப்பில் இன்னமும் பேச்சுவார்த்தைகள் போய் கொண்டே இருக்கிறதாம்.. எனவே இவர்கள் இருவரும் எந்த புள்ளியில் ஒன்றிணைவார்கள் என்று தெரியவில்லை.
அதிமுக தவெக கூட்டணி
விஜய் தனித்து நின்றால், வீட்டுக்கு 2 ஓட்டு கன்பார்ம்டு என்று நம்பப்பட்டது.. ஆனால் கரூர் சம்பவத்துக்கு பிறகு, விஜய் தனித்து நிற்பாரா என்றே தெரியவில்லை.. காரணம், விஜய் கட்சியிலிருந்த நிர்வாகிகள் ஆளுக்கொரு பக்கம் தெறித்து ஓடிவிட்டார்கள்.. இவர்களை நம்பி எப்படி விஜய் தேர்தலை சந்திப்பார்? எல்லா தொகுதிகளிலுமே விஜய் போட்டியிட முடியாது. மற்ற நபர்களை எப்படி போடுவார்?
பூத் ஏஜெண்ட்டுகள் வரை தவெகவில் சரியாக வைத்துள்ளார்களா தெரியவில்லை.. இன்னும் பல மாவட்டங்களில் இன்னும் மாவட்ட செயலாளர்களையே நியமனம் செய்யவில்லையாம். விஜய் என்ற ஒரு பிம்பத்தை மட்டுமே வைத்து ஜெயித்துவிட முடியுமா? மெத்தனமாகவே இருந்தால் எப்படி வெற்றி பெற முடியும்?
எழுந்து ஓடணும் விஜய்
24 மணி நேரமும் நம்முடன்தான், நமக்காக தவெக உள்ளார்களா? என்பதையும் மக்கள் இனிவரும் நாட்களில் பார்ப்பார்கள். எனவே இதையெல்லாம் விஜய் சரி செய்து கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான அவகாசம் என்பது மிகவும் குறைவாக உள்ளது.. தேர்தல் நெருங்கிவிட்டது.. இப்போதாவது விஜய் எழுந்து ஓட வேண்டும்.. மகாபலிபுரம் சந்திப்பு முடிந்ததுமே, உடனே எழுந்து மக்களிடம் ஓட வேண்டும்.
கரூர் நிகழ்வுக்கு பிறகு தனக்கான ஆதரவு குறைந்துள்ளது பற்றி விஜய் யோசிக்க வேண்டும்.. ஊடகங்களில் நடக்கும் விவாதங்களையும் அவர் கட்டாயம் பார்ப்பதாக தெரிகிறது. எனவே ஒரு முடிவுக்கு இந்நேரம் வந்திருப்பார்..
ஒதுக்கப்பட்ட எஸ்ஏசி
அதேபோல தவெகவில் உள்ள நிர்வாகிகளே சரியாக இருக்க வேண்டும்.. இதுவே அவரது அப்பா எஸ்ஏசி அவருடன் இருந்திருந்தால் அனைத்தையும் கவனித்து கொள்வார்.. சரி-தவறை எடுத்து சொல்வார்..
விஜய்யுடன் அவரும் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் விஜய்யுடன் எஸ்ஏசி இல்லாத சூழ்நிலை தற்போது உள்ளது.. அதற்கான காரணமும் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், யாராவது சரியான விஷயங்களை விஜய்யின் காதுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அவரை சுற்றியிருப்பவர்களுக்கு அந்த திறமை இல்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications