எடப்பாடிக்கு 15%தான் வாக்கு கிடைக்கும்.. அலறி நிற்கும் அதிமுக தலைகள்.. சவால் விடும் திடுக் கணிப்பு
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு 15 சதவிகித வாக்குகள் கிடைக்கும். அதற்கு மேல் கிடைக்காது. அதுதான் நிதர்சனம். நாங்கள் கணக்கு போட்டு துல்லியமாக சொல்கிறோம் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சரமாரி விமர்சனங்களை வைத்துவிட்டு அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. அதிமுகவின் இந்த முடிவு பற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியாவிற்கு யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில், அதிமுகவில் இரட்டையர்களாக எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருந்த போதே அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இப்போது ஓ பன்னீர்செல்வம் இல்லை. அண்ணாமலையும் இல்லை. அப்போதே 35 சதவிகிதம் மட்டுமே இவர்கள் வாக்குகள் பெற்றனர். ஆனால் இப்போது ஓ பன்னீர்செல்வமும் இல்லை. அப்படி இருக்க எடப்பாடி எப்படி வெல்ல முடியும்.
ஜெயலலிதா போன பின் சீமான் வாக்குகளை பிரித்துவிட்டார். இஸ்லாமியர்கள் வாக்குகள் போய்விட்டது. பல ஜாதி வாக்குகள் சீமானுக்கு செல்லும். இது போக முக்குலத்தோர் வாக்குகளை ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பிரிப்பர். அப்படி இருக்க எடப்பாடி பழனிச்சாமி எப்படி வெல்ல முடியும்? அவருக்கு வெற்றி சாத்தியம் உள்ளதா?
( 1 மாசம் ஆக போகுது.. ஸ்டாலின் போட்ட போடு.. கடும் டென்ஷனில் எடப்பாடி.. நடுங்கி போன அதிமுக.. ஏன்?)
எடப்பாடி முடிவு: எடப்பாடி பழனிசாமிக்கு இதுதான் சேலஞ்சு. அவருக்கு 15 சதவிகித வாக்குகள் கிடைக்கும். அதற்கு மேல் கிடைக்காது. அதுதான் நிதர்சனம். நாங்கள் கணக்கு போட்டு துல்லியமாக சொல்கிறோம். அவர் தன்னை பெரிய ஆள் என்று சொல்லலாம். ஆனால் அவருக்கு உண்மை தெரியவில்லை. அவருக்கு அரசியல் தெரிகிறது.

ஆனால் புள்ளி விவரம் தெரியவில்லை. அண்ணாமலைக்கு இது புரிந்து உள்ளது. அதிமுகவிற்கு 15 சதவிகித வாக்குகள் மட்டுமே உள்ளது என்றும் அவருக்கு தெரியும். அதனால் எடப்பாடி க்கு சீட்டு வராது என்று அண்ணாமலை டெல்லியிடம் சொல்லி இருக்கிறார். அதை அமித் ஷா ஏற்றுக்கொண்டு.. அதிமுகவிற்குத்தான் ஆதரவு இல்லையே எங்களுக்கு 20 சீட்டு கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.
எடப்பாடி ஏற்கவில்லை: ஆனால் அதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை. 20 இடங்கள் கொடுக்க முன்வரவில்லை. மோடி இல்லாமல் நீங்கள் லோக்சபா தேர்தலை சந்திக்க முடியாது என்று அமித் ஷா எடப்பாடியிடம் கூறியுள்ளார். ஆனால் அதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கூட்டணி முறிந்துவிட்டது.

எடப்பாடி தன்னை பொய்யாக ஆளுமை என்று கட்டமைத்தாலும் அவருக்கு 15 சதவிகித வாக்குகள் மட்டுமே உள்ளது என்று சொல்வேன். அவர் மக்கள் முன் நிற்கட்டும். மக்கள் முன் பலத்தை நிரூபிக்கட்டும். அண்ணாமலை கண்டிப்பாக அதிமுக வாக்குகளை பெரிய அளவில் பிரிப்பார். அவர் தன்னம்பிக்கையோடு நிற்கலாம். ஆனால் புள்ளி விவரம் அவருக்கு தெரிய வேண்டும்.
இதற்கு முன் தேர்தல்களில் பெற்றதை விட குறைவாகவே அவர் வாக்குகளை பெறுவார். அண்ணாமலை யாத்திரைக்கு மோடி வருவார். அப்போது ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அதில் கலந்து கொள்வார்கள். இதில் என்டிஏ கூட்டணி எப்படி இருக்கும் என்ற தோற்றம் காட்டப்படும். என்டிஏ கூட்டணியின் புதிய முகம் இதில் பலருக்கும் தெரியும். ஈரோடு கிழக்கு தேர்தலில் கூட எடப்பாடி வெல்ல முடியவில்லை. 2019ல் கொங்கில் கூட அவரால் எம்பி சீட்டுகளை வெல்ல முடியவில்லை. இதை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications