டெண்டர் ஒதுக்குவது அரசின் கொள்கை முடிவு.. அறப்போர் இயக்கம் தலையிடமுடியாது- ஈபிஎஸ் தரப்பு பரபர வாதம்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில், உச்சநீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இன்னொரு வழக்கு அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அறப்போர் இயக்கம் குற்றம் சுமத்திய புகார், அடிப்படை ஆதாரங்கள் அற்றது என்று கூறி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

ஈபிஎஸ் மீது ஊழல் புகார்
முந்தைய அதிமுக ஆட்சியில் 2019-2021 ஆண்டுகளில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போர் இயக்கம் சார்பில் ஜூலை 22ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், நெடுஞ்சாலைத் துறை முறைகேடுகளால் அரசுக்கு ரூ. 692 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டது.

அவதூறு வழக்கு
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக அறப்போர் இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி, அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். மேலும், மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆதாரம் இருக்கிறது
இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் தெரிவித்தது. எனவே மான நஷ்ட ஈடு கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசின் கொள்கை முடிவு
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை நிராகரித்த நீதிபதி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞரை வாதிட உத்தரவிட்டார். இதையடுத்து ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது எனவும் தெரிவித்தார்.

நிறுவனங்கள் வழக்கு தொடரவில்லை
மேலும், ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை எனவும் மேலும் டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை எனவும் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

புகழுக்கு களங்கம் விளைவிக்க
தம்முடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் குற்றம்சாட்டப்படுவதாகவும் கூறினார். தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் நேரடியாக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளை வைப்பதே தவறு எனவும் முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படை குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகவும் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இழப்பீடு கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது
மேலும், "லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் சமூக வலைதளங்களில் ஒரு குற்றச்சாட்டை கூறும் முன் அதை உறுதிப்படுத்த வேண்டும். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நபர் குறித்து அவதூறு கருத்துகளை கூறிவிட்டு அதற்கு இழப்பீடு கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது. எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளை மறுநாளுக்கு (செப்., 1) தள்ளிவைக்கப்பட்டது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications