மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்...கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கொக்கரிப்பு- இபிஎஸ் கண்டனம்
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக கூறியிருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில், காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், முதல்வர் ஸ்டாலின் அவரது மாநிலத்தைப் பார்த்துக் கொள்ளட்டும். கர்நாடகாவில் நான் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி வகிப்பதே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காகத்தான். எங்களுக்கு நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூர் குடிநீர் பற்றாக்குறை குறித்து அனைவருக்குமே தெரியும். ஆகையால் எங்களுக்குதான் நியாயம் கிடைக்கும் என கூறியிருந்தார்.

டிகே சிவகுமாரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: மேகதாது அணை குறித்து ஏற்கனவே கர்நாடக அரசின் முதல்வரும் துணை முதல்வரும் ஆட்சேபமிக்க கருத்துகளை கூறியும் திமுக அரசின் முதல்வர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்த நிலையில், தற்போது "மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்" என்று கர்நாடக காகிரஸ் துணை முதல்வர் @DKShivakumar கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கூட்டணி தர்மத்திற்காக தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகும் நிலையிலும் மவுனியாக இருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வர் திரு.@mkstalin அவர்களுக்கு என்னுடைய கடும் கண்டனம்.
ஏற்கனவே மேகதாது விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அனுமதித்த இந்த விடியா அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications