பொங்கல் பரிசுத் தொகை 5000.. மக்கள் மனம் குளிர வெளியாகுமா அறிவிப்பு? தமிழக அரசைக் கேட்கிறார் எடப்பாடி
சேலம்: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் அல்லது 5000 ரூபாய் ரொக்க பணம் வழங்க திமுக தலைமையிலான தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளர். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," அதிமுக இருந்த போது தைப்பொங்கல் தான் முக்கிய பண்டிகையை அனைத்து மக்களும் கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொங்கல் பரிசு தொகை கொடுத்தார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக அரசு இருந்தபோது குடும்ப அட்டைக்கு 2500 ரூபாய் நிதியும் கொடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளது. பொங்கல் தொகுப்பு எவ்வாறு வழங்கப்படும் என்று அறிவிப்பு இதுவரை வரவில்லை. தைப்பொங்கல் அன்று மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சூழல் உள்ளது. மக்களுக்கு இந்த ஆண்டு திமுகவிற்கு இறுதி ஆண்டு. இனி ஆட்சிக்கு வர மாட்டார்கள்...இந்த ஆண்டாவது மக்கள் மனம் குளிர் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5 ஆயிரம் ரூபாய் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகை
அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்த போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2500 ரூபாய் கொடுத்தபோது, ஏன் ஐயாயிரம் ரூபாய் கொடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தார். அதே கேள்வி தான் நாங்களும் எழுப்புகிறோம் முதல்வராக உள்ள ஸ்டாலின் 5000 பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அரசு குறிப்பிட்டு இருந்தது. இதுவரை நிறைவேற்றினர்களா? மத்திய அரசு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளது ஆனால் அதை பாராட்டுவதற்கு திமுக அரசுக்கு மனமில்லை.. பெயர் மாற்றம் அறிவித்துள்ள நிலையில், அதே பெயர் தொடர வேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.
மாநில அரசு
நாடாளுமன்றத்தில் வாதாட வேண்டியதை நாடாளுமன்றத்தில் தான் வாதாட வேண்டும்; அதற்கு தான் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த 39 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளன. பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். நாடாளுமன்றத்தில் மாநில அரசுக்கு நிதிச் சுமை ஏற்படுகிறது என்று வாதாட வேண்டும். நாடாளுமன்றத்தில் முழுமையாக அழுத்தம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுடைய பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் தான் பேச வேண்டும். வெற்று அறிக்கை கொடுத்து மழுப்பலான பதில் சொல்லி மக்களை ஏமாற்றக்கூடாது.
தமிழகத்தின் கடன்
ஒவ்வொரு ஆண்டும் அதற்கான கடன் வாங்கியதற்கான தொகையை வட்டி கட்டி, ஒரு பகுதியை தொகையை திருப்பி வேண்டும். திமுக ஆட்சி வருவதற்கு முன்பாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள். தமிழகத்தில் உள்ள பொருளாதார சூழ்நிலை கருதி, அதற்காக ஒரு குழு அமைப்பதாக தெரிவித்திருந்தார். குழு அமைத்த பிறகு தான் கடன் அதிகரித்துள்ளது. 73 ஆண்டு காலமாக பல ஆண்டுகளாக தமிழகத்தை பல கட்சிகள் ஆண்டுள்ளது. 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி தான் தமிழகத்தின் கடனாக இருந்தது. திமுக ஆட்சியில் கடனை மட்டுமே வாங்கிக் கொண்டுள்ளார்கள். திமுக ஆட்சி நிறைவு செய்யும்போது சுமார் 5 லட்சம் கோடி கடன் வாங்கிய மாநிலமாக இருக்கும். கடன் வாங்கியதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதுதான் திமுக அரசின் மிகப்பெரிய சாதனை; கடன் வாங்கியதுதான் முதல் சாதனை" என்றார்.












Click it and Unblock the Notifications