முதலில் உதயநிதி.. அடுத்து அண்ணாமலை.. இப்ப இவருமா.. எடப்பாடி ஒரு வாரத்தில் செய்த 3 சம்பவம்
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி பேச முதலில் உதயநிதிக்கு தடை வாங்கிய எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலும் தனக்கு எதிராக பேசக்கூடாது எனறு தடை வாங்கி உள்ளார். இது ஒருபுறம் எனில், தொடர்ந்து விமர்சித்து வந்த அண்ணாமலைக்கு பாஜக உடன் கூட்டணியை முறித்து எடப்பாடி அதிரடி காட்டி உள்ளார்.
சம்பவம் 1: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது என்றும், ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி குறித்து பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கமான ஒன்று தான். என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களில் இருந்து உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளது. இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும். எனவே, இனி இதுபோல அறிக்கைகள் வெளியிடக் கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது என்று கூறி தடை விதித்தது. மேலும் இந்த விவகாரத்தில் பதில் அளிக்குமாறு உதயநிதிக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
சம்பவம் 2 : இது ஒருபுறம் எனில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்தவர் டிரைவர் கனகராஜ். இவர், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவராக பணியாற்றியவர். இவரது சகோதரர் தனபால், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார்.
இதையடுத்து, கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க கோரியும், ஏற்கனவே பேசி சமுதாயத்தில் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், அ.தி.மு.க., கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், என் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை பேசி வருகிறார், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அரசியல் எதிரிகளின் தூண்டுதலின்பேரில் இவ்வாறு அவர் அவதூறு பரப்புகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா நேற்று பிறப்பித்த உத்தரவில், "வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதார ஆவணங்களில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனபால் அவதூறு கருத்துகளை கூறியுள்ளார் என்பதற்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. தொடர்ந்து இதுபோல பேசுவதற்கு அனுமதித்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினார். மேலும் விசாரணையை அக்டோபர் 10-ந்தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் 3: அரசியல் ரீதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசி வந்தார். அதிமுக ஊழல்கள் குறித்து வெளியிடப்போவதாகவும் தெரிவித்து வந்தார். அண்மையில் அண்ணா குறித்து பேசியது சர்ச்சையானது. அப்போது எடப்பாடி பழனிசாமியை நான் எப்படி முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியும் என்று அதிரடியாக கூறினார். இது அதிமுகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில்அண்ணாமலைக்கு எந்த பதிலும் அளிக்காத எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணியை அதிரடியாக முறித்தார். பாஜக உடன் 2024 தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். இப்படி இந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து 3 சம்பவங்களை எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.
-
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications